Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நடிகரின் தலையில் திடீர்ரென பற்றி எரிந்த 'தீ' யால் பரபரப்பு!.(வீடியோ)

நடிகரின் தலையில் திடீர்ரென பற்றி எரிந்த 'தீ' யால் பரபரப்பு!.(வீடியோ)

சாகசம் செய்த போது மன்சூர் அலிகான் தலையில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் அலிகான் தயாரித்து இயக்கும் படம் அதிரடி. இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது மேடையில் சாகசங்கள் மேற்கொண்டார் மன்சூர் அலிகான். தொடர்ச்சியாக 50 முட்டைகளை சாப்பிட்ட அவர் தன் வயிற்றின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அதை சம்மட்டியால் உடைக்கும் சாகசத்தை செய்தார். 

பிறகு ஓடுகளை காலாலும் பீர் பாட்டில்களை கையாலும் உடைத்தார். தொடர்ந்து ஓடுகளின் மீது நெருப்பு பற்ற வைத்து தலையால் உடைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலையில் தீப்பிடித்தது. உதவியாளர்கள் ஓடிவந்து, கோணிப்பையை அழுத்தி தீயை அணைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர் இந்த ஆண்டின் முதல் தொடக்க விழா என்பதால் சாகச நிகழ்ச்சி நடத்தினேன் என்று கூறியுள்ளார்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top