Daytamil » Home | Videos | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்த டெல்லி மாணவர்கள்!

செயற்கை ரத்தத்தை கண்டுபிடித்த டெல்லி மாணவர்கள்!

எதிர்பாராத விபத்துகள், உயிரைக் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின் போது மட்டும்தான் விலை மதிக்க முடியாத ரத்தத்தின் அவசியத் தேவை என்னவென்று நம்மில் பலருக்கு புரிகின்றது. இன்றைய நிலவரப்படி, அரிய வகை நீங்கலாக சாதாரண வகை ரத்தம் ஒரு யூனிட் சுமார் 500 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இதற்கு மாற்றாகவும், இயற்கையான மனித ரத்தத்துக்கு இணையாகவும், செயற்கை ரத்தத்தை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

அதில் சில நாடுகள் வெற்றி கண்டும் உள்ளன. எனினும், அந்த செயற்கை ரத்தத்தில் எல்லாம் இயற்கையான வகையில் சுரக்கும் மனித ரத்தத்தில் உள்ளது போன்ற சமவிகித அளவில் ‘ஹீமோகுளோபின்’ என்ற உயிர்ச்சத்து இல்லாமல் இருப்பது, இந்த ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர்வேதியல் துறை மாணவர்கள் முழு ஹீமோகுளோபின் சத்துடன் செயற்கை ரத்தத்தை கண்டுபிடிக்கும் பெருமுயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். 

பேராசிரியர் சுமன் குண்டூ தலைமையில் நடைபெற்று வந்த இந்த ஆராய்ச்சியின் வெற்றி பற்றிய தகவல் "ஜர்னல் ஆஃப் பயோலாஜிக்கல் கெமிஸ்ட்ரி" என்ற சர்வதேச அறிவியல் பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் மனித ரத்தத்தில் உறைந்துள்ள ஹீமோகுளோபின், ரத்த சுழற்சி முறையின்போது ’ஹீமே’ என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும்.

ஹீமோகுளோபினின் மூலக்கூறில் இருந்து இது வெளியாவதை தடுக்க ஒரு வகை ரசாயன அமிலத்தை செலுத்தி, செயற்கை ரத்தத்தில் இந்த ’ஹீமே’வை கட்டுப்படுத்தும் 'மையோகுளோபின்’ என்ற புதிய கண்டுபிடிப்பை செலுத்தியதன் விளைவாக, பின்னர் நடத்தப்பட்ட சோதனையின்போது இயற்கையான ரத்தத்தில் உள்ளதைப் போல் அனைத்து சத்துகளும் நிறைந்ததாக அந்த செயற்கை ரத்தம் மாறியது. அதே வேளையில், ரத்த சுழற்சியின்போது அதிலிருந்து ’ஹீமே’வும் வெளியாகவில்லை. 

எனவே, இந்த ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் இயற்கை ரத்தத்துக்கு அசல் மாற்றாக இந்த செயற்கை ரத்தத்தை வர்த்தக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த முடியும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. வர்த்தக ரீதியாக இந்த செயற்கை ரத்தம் விற்பனைக்கு வரும் வேளையில், தற்போது கொடையாளிகளின் மூலம் பெறப்படும் ரத்தத்தின் விலையை விட சுமார் 10 சதவீதம் குறைவான விலையில் இது கிடைக்கும். 

மேலும், தற்போது விற்பனையாகிவரும் இயற்கை ரத்தத்தை அதிகபட்சமாக 50 நாட்கள் வரைதான் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியும். ஆனால், இந்த செயற்கை ரத்தத்தை மூன்றாண்டு காலம் வரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தலாம். எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டுசென்று கையிருப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.......!

மேலும் படிக்க

ரொமான்ஸில் வெற்றி பெற சரியான ரூட் எது தெரியுமா?

ரொமான்ஸில் வெற்றி பெற சரியான ரூட் எது தெரியுமா?

ஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்... ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தக்க வைப்பது... தித்திப்பை எப்படி நீடிக்கச் செய்வது... இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறார் ஒரு நிபுணர். ஒவ்வொரு முறையும் உங்களது துணையைப் பார்க்கும்போதெல்லாம் நீ செக்ஸியாக இருக்கிறாய், நீ ரொம்ப ஹாட் என்று சொல்லிக் கொண்டிருங்கள். உங்கள் இருவருக்குள்ளும் பூத்த நெருப்பு தொடர்ந்து சுழன்றபடியே இருப்பதை உணர்வீர்கள் என்று கூறுகிறார் இவர். 

ஒவ்வொரு இரவையும் ரொமான்டிக் நைட்டாக மாற்றுங்கள். சின்னதோ, பெரியதோ, திடீரென வந்ததோ.. எதுவாக இருந்தாலும் கிடைத்த செக்ஸ் வாய்ப்பை விடாதீர்கள்... மறக்க முடியாத அளவுக்கு அதை டைட்டாக கொண்டாடுங்கள். உங்கள் பேச்சில் துணையை ஜில்லிட வையுங்கள்.. நீங்கள் பேசப் பேச அவருக்குள் பூ பூக்க வேண்டும், பூத்த வேகத்தில் காய் காத்து குலுங்கிட வேண்டும்... காய் பழமாகி, பழம் கணிந்து உங்கள் மனதில் வந்து விழ வேண்டும். அதுதான் ரொமான்ஸின் முதல் வெற்றி... 

உங்கள் துணையை எப்படியெல்லாம் கொஞ்ச முடியுமோ அப்படியெல்லாம் கொஞ்சுங்கள். மடியில் சாய்த்து கவிதை பாடுங்கள்.. மலர் முகத்தை கையில் தூக்கி செல்லமாக கிசுகிசுப்பாக பேசுங்கள்... காதுகளில் முத்தமிடுங்கள்... இதழ்களில் அமுதம் பருகுங்கள்.. கண்களில் இதழ் பதித்து ஐ லவ்யூ சொல்லுங்கள்... டான்ஸ் தெரியுமா.. கையைப் பிடித்து ஆடுங்கள்.. எடை குறைந்தவரா.. தூக்கி எடுத்து கொண்டாடுங்கள்.. இடுப்பு பிடித்து சின்னதாக சீண்டுங்கள்... 

உங்களது ஒவ்வொரு அசைவிலும் செய்கையிலும் இளமை கொப்பளிக்க வேண்டும்... வேகம் கொந்தளிக்க வேண்டும்.. காதல் காட்டுத்தீயாக பற்றி எரிய வேண்டும்.. காமனை வெல்ல இந்த ரூட்தான் சரியானது... ஒவ்வொரு நொடியிலும் அவருக்கு உங்கள் முகம் மட்டுமே தெரிய வேண்டும்.. உங்களது பெயர் மட்டுமே அவருக்கு உச்சரிக்க முடிய வேண்டும்.. சுவாசத்தில் உங்களை மட்டுமே அவர் சுவாசிக்க வேண்டும்.. மூச்சு விடும்போதும், இழுக்கும்போதும் உங்களை மட்டுமே அவர் நினைக்க வேண்டும்.. 

இப்படி ஆதியும் அந்தமுமாக நீங்கள் அவருக்குள் புகும்போது, பிரகாசமாக எரியத் தொடங்கும் ஜோதி... காதலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. ரூம் போட்டெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.. முழுக்க முழுக்க அவரிடம் சரண்டராகி விடுங்கள். அவரை போஷித்து, பூஜித்துக் கொண்டாடுங்கள்... பிறகு பாருங்கள் அன்புச் சொரிதலை என்கிறார் அந்த நிபுணர்... இவர் சொல்வது சரிதானா.. செஞ்சு பாருங்களேன்.......!

மேலும் படிக்க

கடலில் 27,000 அடிக்கு கீழே பேய் மீன் கண்டுபிடிப்பு!.

கடலில் 27,000 அடிக்கு கீழே அபூர்வ மீன் கண்டுபிடிப்பு!.

பசிபிக் மரியானா அகழியில் 27,000 அடி கீழே பதுங்கி இருந்த பேய் நத்தை மீன் கண்டறியப்பட்டது.உலகின் ஆழமான பகுதியில் வாழும் இந்த மீன் 2014 -ம் வருடத்தின் ஒரு ஆச்சர்யமான செய்தியாகும்.......!

 

மேலும் படிக்க

தங்கையை நடுரோட்டில் நிர்வாணப்படுத்திய அக்கா...

தங்கையை நடுரோட்டில் நிர்வாணப்படுத்திய அக்கா...

சீனாவில் பெண் ஒருவர் தன் கணவருடன் உறவு கொண்ட தங்கையை நடுரோட்டில் மானபங்கப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் செங்-கர்மா என்ற தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு வந்ததினால் இருவரும் விவகரத்து பெற முடிவு எடுத்து வழக்கு தொடர்ந்தனர். இவர்களின் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது தங்கைக்கும், கணவருக்கும் கள்ள உறவு இருப்பதை அறிந்து கொண்ட இவர், அவர்களை கையும் களவுமாக ஒருநாள் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது தங்கையின் ஆடைகளை வீதியில் வீசி அவரை நிர்வாணப்படுத்தியுள்ளார். நிர்வாண நிலையில் இருந்த அவரது தங்கை செய்வதறியாது திகைத்துள்ளார். இச்சம்பவத்தை அங்கிருந்த பலர் புகைப்படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.....!

தங்கையை நடுரோட்டில் நிர்வாணப்படுத்திய அக்கா...

தங்கையை நடுரோட்டில் நிர்வாணப்படுத்திய அக்கா...

மேலும் படிக்க

சிகரெட் பழக்கத்தை கைவிட பலர் வெற்றி கண்ட வழி.?

சிகரெட் பழக்கத்தை கைவிட பலர் வெற்றி கண்ட வழி.?

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..? தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள். மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது.

புகைப் பிடிப்பவர்களைத் தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துகிறது,

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் நண்பர்களிடமும் உறவுகளிடமும் சொல்லிப் புகைப்பழக்கத்தை ஒழிக்க முயற்றி செய்யுங்கள்....!

மேலும் படிக்க

அம்மன் கண்களில் திடிரென வழிந்தோடிய கண்ணீர்..

அம்மன் கண்களில் திடிரென வழிந்தோடிய கண்ணீர்..

ராணிப்பேட்டை காரையை அடுத்த புளியங்கண் கிராம குளக்கரையில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அம்மன் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் தற்செயலாக அம்மன் முகத்தை பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்துள்ளனர். உடனே சிறுவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். 

இதனையடுத்து பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அம்மன் கண்களில் இருந்து கண்ணீர் போன்று வருவதை பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீபோல கிராமம் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து பக்தர்களும், பொதுமக்களும் கோவிலுக்கு சென்று பார்த்துவிட்டு சென்றனர். 2 கண்களிலும் கண்ணீர் போன்று வந்தது. காலை 11 மணிக்கு பிறகு அம்மனின் ஒரு கண்ணில் மட்டும் அதுபோன்று வந்தது. பின்னர் பகல் 12.30 மணிக்கு பின்னர் அது நின்று விட்டது.....!

மேலும் படிக்க
 
Back to Top