Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சென்னைக்கு ஆபத்து ;பஞ்சாங்கம் சொன்னது நடந்தது?

சென்னைக்கு ஆபத்து ;பஞ்சாங்கம் சொன்னது நடந்தது?

வருகின்ற 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர். 

அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்’. இதில், வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள். அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் நவம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top