Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சொந்தமாக குட்டி விமானம் தயாரித்த இந்திய வாலிபர்!.

சொந்தமாக குட்டி விமானம் தயாரித்த இந்திய வாலிபர்!.

குட்டி விமானத்தை சொந்தமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஷாஜி தாமஸ் என்ற 'வில்லேஜ்' விஞ்ஞானி. வாய் பேச முடியாத, காது கேளாத ஷாஜியின் சாதனையை பற்றி இப்போது ஊர், உலகமே புகழ்ந்து பாராட்டுகிறது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழாவை சேர்ந்தவர் ஷாஜி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஷாஜி எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். 

அதேநேரத்தில், எஞ்சின்கள் மீது அதீத ஆர்வம் வைத்து, அதனை பிரித்து பழுது பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் மரியா என்பவரை ஷாஜி திருமணம் செய்து கொண்டார். அப்போது, ஷாஜியின் எஞ்சின் ஆர்வம் குறித்து தெரிந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அதன் விளைவாக இப்போது குட்டி விமானத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். 

கிளைடர் ரக விமானத்தை தனது சொந்த முயற்சியிலேயே உருவாக்கியிருக்கிறார். புத்தகங்களை படித்தும், ஆர்வத்திலும் அந்த குட்டி விமானத்தை தயாரித்துள்ளார். தொடுபுழாவிலுள்ள கல்லூரி ஒன்றிலிருந்து உதிரிபாகங்களையும், பெங்களூரிலிருந்து விமானத்திற்கான எஞ்சினையும் வாங்கியிருக்கிறார். தனது சொந்த விமான கனவை நனவாக்குவதற்காக, தனது இடத்தை விற்று பாகங்களை வாங்கியிருக்கிறார். 

இந்த விமானத்தை 15 லட்சம் செலவில் உருவாக்கியிருக்கிறார். இந்த ரக விமானங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, ஷாஜியின் விமானம் 50 சதவீதம் விலை குறைவானதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகள் முயற்சியில் குட்டி விமானத்தை ஷாஜி உருவாக்கியிருக்கிறார். அவரது ஆர்வமும், உழைப்பும் மிக அதிகம் என்று அவரது மனைவி மரியா பெருமிதம் தெரிவிக்கிறார். 

திருநெல்வேலி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் வைத்து தனது குட்டி விமானத்தை பறக்கவிட்டு சோதனை நடத்தியிருக்கிறார் ஷாஜி. ஆனால், அவரிடம் விமானத்தை இயக்குவதற்கான உரிமமும், அவரது விமானத்திற்கு பறப்பதற்கான தகுதிச் சான்றும் இல்லாததால், 20 அடி உயரத்திற்கு மேல் பறக்க விட இயலவில்லையாம். தனது விமானத்திற்கு ஷாஜி ஏர் என்று பெயரிட்டு அழைக்கிறார். ஷாஜியின் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top