Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மாணவர்கள் முன் ஆடையை அவிழ்த்த டீச்சர்..(வீடியோ)

மாணவர்கள் முன் ஆடையை அவிழ்த்த டீச்சர்..(வீடியோ)

நெதர்லாந்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு உடற்கூறியல் பற்றி கற்பிக்க வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டெபி ஹீர்கென்ஸ். அவர் ஹேசர்வூடில் உள்ள க்ரோன் ஹார்ட் ஸ்கோலன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு உடற்கூறியல் பற்றி பாடம் நடத்த வேண்டி இருந்தது. மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் வித்தியாசமாக பாடம் நடத்த முடிவு செய்தார். 

இதையடுத்து வகுப்பிற்கு வந்த அவர் டேபிள் மீது ஏறி நின்று தனது உடையை மாணவர்களுக்கு முன்பு அவிழ்த்தார். பார்த்தால் அவரது ஆடைக்குள் உடம்பை ஒட்டியபடி உடற்கூறுகைளை எடுத்துகாட்டும் வகையில் உடை அணிந்திருந்தார். அதன் பிறகு அந்த உடையையும் அவிழ்த்தார். அதற்குள் எலும்புக்கூடு வரைந்த உடை இருந்தது. ஆசிரியையின் இந்த வித்தியாசமான முயற்சியை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டெபியின் முயற்சியை மாணவர்கள் மட்டும் இன்றி பள்ளி நிர்வாகமும் பாராட்டியுள்ளது......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top