Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆண்ட்ராய்டு போனில் இலவசமா call செய்வது எப்படி.?

ஆண்ட்ராய்டு போனில் இலவசமா call செய்வது எப்படி.?

ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது, மேலும் பல்வேறு சேவைகளை இலவசமாக பயன்படுத்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் சிறந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.. அந்த வகையில் பிரபல ஆண்ட்ராய்டு செயலியான ஹைக் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள உதவும் திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கின்றது. 

ஹைக் மெசன்ஞ்சர் செயலியின் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதோடு விரைவில் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது......

@தற்சமயம் ஹைக் மெசன்ஞ்சர் செயலியை பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் கூகுள் அக்கவுன்டு சைன் இன் செய்து பதிவிறக்கம் செயலாம்.

@பதிவிறக்கம் செய்த ஹைக் மெசன்ஞ்சர் செயலியை உங்களது ஆண்ட்ராய்டு கருவியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

@இன்ஸ்டால் செய்தவுடன் செயலியை ஓபன் செய்தால் உங்களது கருவியில் இருக்கும் காண்டாக்ட்கள் அனைத்தும் ஹைக் செயலியில் சின்க் செய்யப்பட்டு விடும். 

@ஹைக் மெசன்ஞ்சர் மூலம் இலவசமாக 100 நபர்களுக்கு க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். 

@இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் க்ரூப் சாட் ஆப்ஷனில் இருக்கும் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

@ஹைக் மெசன்ஞ்சர் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top