
குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக பிஸ்கட்டை கடைகளில் தான் வாங்கி கொடுப்போம். குழந்தைகளுக்குப் பிடித்த பிஸ்கட்டை வீட்டிலேயே சுவையாக செய்துக் கொடுக்கலாம். அனைவரும் பிஸ்கட் செய்வது கஷ்டம் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் பிஸ்கட் செய்வது மிகவும் ஈஸியானது. இங்கு பிஸ்கட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.....
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 230 கிராம்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 115 கிராம்
உப்பு - 1/4 டீஸ்பூன்
கன்ஃபெக்ஷனர் சுகர் (Confectioner's sugar) - 100 கிராம்
முட்டை - 1
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பிஸ்கட் செய்முறை;
@முதலில் ஒரு பௌலில் மைதா மாவு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
@பின் மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சற்று மென்மையாக வரும் வரை அடித்து, பின் முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து, கலவை ஒரு பதத்திற்கு வரும் வரை நன்கு அடிக்க வேண்டும்.
@முக்கியமாக அளவுக்கு அதிகமாக அடிக்க வேண்டாம். இல்லாவிட்டால், பிஸ்கட் சரியான வடிவத்தில் வராமல் போய்விடும்.
@பின் மைதா மாவை அதில் போட்டு, நன்கு மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
@பிசைந்து வைத்துள்ள மாவை இரண்டாக பிரித்து, அதனை பிளாஸ்டிக் கவர் போன்று இருக்கும் க்ளிங் ஃபில்ம் (cling film) கொண்டு சுற்றி, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
@பின்பு மைக்ரோ ஓவனை 180 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும்.
@பின் பேக்கிங் ட்ரேயில், பார்ச்மெண்ட் பேப்பரை விரித்து, அதில் மைதா மாவை 1/8 இன்ச் அளவிற்கு கெட்டியாக பரப்ப வேண்டும்.
@பிறகு வேண்டிய வடிவத்தில் வெட்டி, 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
@பின் அதனை ஓவனில் வைத்து, பிஸ்கட் பென்னிறமாகும் வரை 10 நிமிடம் வைத்து வெளியே எடுத்து வைக்க வேண்டும். இப்பொழுது பிஸ்கட் தயார்.....!