Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நிர்வாண கனவுகள் ஏன் எதனால் வருகிறது தெரியுமா.?

நிர்வாண கனவுகள் ஏன் எதனால் வருகிறது தெரியுமா.?

கனவுகள் என்பது உலகளாவிய அளவில் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும் ஒரு நிலையே. பெரும்பாலானவர்களுக்கு சராசரியாக வாரம் ஒரு முறையாவது கனவு வரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், உங்களுக்காக ரகசியங்களை காக்கும் ஆழ்மனதின் உணர்ச்சி ரீதியான கட்டுப்பாட்டின் ஒரு வடிவமே கனவு என கனவு பெயர்ப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பலருக்கும் வருகிற பொதுவான கனவுகள் பற்றியும் அவை என்ன குறிக்கிறது என்பதைப் பற்றியும் இனி பார்க்கலாம்... 

நிர்வாண கனவுகள்;கனவில் எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது, நீங்கள் மிகப்பெரிய பார்வையாளர்களின் கூட்டம் முன் நிற்கும் போதோ, அல்லது பெரிய பார்டி ஒன்றில் கலந்து கொள்ளும் போதோ, நீங்கள் நிர்வாணமாக இருப்பதை திடீரென உணர்ந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய கனவுகளை இரண்டு விதமாக பார்க்கலாம் - ஒன்று, வெளிப்படுத்துவதற்கு பயந்து உங்களுக்குளே சிலவற்றை மறைத்து வைத்துக்கொள்வது; மற்றொன்று, உங்கள் வலுவின்மையை அனைவரும் உங்கள் முகப்பின் மூலமாக தெரிந்து கொள்ளுதல். 

விழும் கனவுகள்;பலருக்கும் இந்த கனவும் வந்திருக்கும் - மாடியில் இருந்து பூமியை நோக்கி உச்ச வேகத்தில் விழுதல். மறதிநிலையில் நழுவும் போது ஏற்படும் இரத்த கொதிப்பின் ஏற்ற இறக்கம், அல்லது சமநிலையை கட்டுப்படுத்தும் காதின் உள்ளே திரவத்தின் இயக்கம் ஆகிய சில காரணங்களால் இது ஏற்படுகிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கீழே விழுவதற்கான கனவுகளின் அர்த்தங்கள் இவைகளை உட்படுத்தும் - கட்டுப்பாட்டை இழக்கும் பயம் மற்றும் உணர்ச்சி ரீதியான சமநிலையின்மை. 

நாய்களால் தாக்கப்படுதல்;மிக கொடூரமான நாய்களால் தாக்கப்படுவதை போல் கனவு கண்டால், கவனமாக இருங்கள்; நம்பிக்கையான தோழன் அல்லது குடும்ப உறுப்பினர் என நீங்கள் முழுவதுமாக நம்பி வந்தவர் உங்களை ஏமாற்றலாம். முதுகில் குத்து வாங்காமல் தடுக்க, உங்கள் நண்பர்கள் வட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை இந்த கனவு வலியுறுத்தும்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top