Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தை சாப்பிட்டு வந்தால்.?

தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தை சாப்பிட்டு வந்தால்.?

பழைய சாதம் பொதுவாக வீட்டில் சாதம் மீந்து விட்டால் இரவில் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை மோர், பச்சை வெங்காயம், மோர் மிளகாய் அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிடுவார்கள். பழைய சாதம் பற்றி பலரும் அறியாத ஒரு உண்மை, முதல் நாள் இரவு நீர் ஊற்றிய இந்த சாதம் ஓர் அமிர்தம் என்பது தான். சமைத்த 100 கி. சாதத்தில் 3.4 மிகி அளவே இரும்பு சத்து உள்ளது. இதே சாதம் 12 மணி நேரம் தண்ணீர் ஊறிய பிறகு இரும்பு சத்து சுமார் 72 மிகி வரை அதிகரிக்கின்றது.

அதே போல் சமைத்த சாதத்தில் சுமார் 475 மிகி வரை சோடியம் உப்பு உள்ளது. அதுவே பழைய சாதத்தில் 303 மிகி என குறைகின்றது. சோடியம் குறைவது உடலுக்கு ஆரோக்கியமானது. பொட்டாசியம் அளவு 840 மிகி வரை உயர்கின்றது. கால்சியம் அளவு சுமார் 20 மிகி-ல் இருந்து 850 மிகி ஆக உயர்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. பழைய சாதம் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது.

பலரும் இதனை வெயில் காலத்திற்கேற்ற உணவாக உட்கொள்கின்றனர். அமெரிக்க சத்துணவு ஆய்வாளர் இந்த பழைய சாதத்தினைப் பற்றி கூறும் பொழுது கீழ்கண்ட ஆய்வு முடிவுகளை குறிப்பிட்டுள்ளார்........,

@பழைய சாதம் காலை உணவாக கொள்வது உடலை லேசாகவும் சத்து கொண்டதாகவும் இருக்கச் செய்கின்றது.

@உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.

@வயிறு நோய்கள் நீங்குகின்றன. இதிலுள்ள நார்சத்து உடலை சக்தியோடு வைக்கின்றது.

@மலச்சிக்கல் நீங்குகின்றது.

@ரத்தக் கொதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது. அதிக சோர்வு தாக்குதல் ஏற்படுவதில்லை. அனைத்து வகை புண்கள் நீங்குகின்றன. அலர்ஜி பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

@முதுமை தோற்றம் குறைகின்றது. காபி, டீ என்ற எண்ணம் வெகுவாய் குறைகின்றது. உள் உறுப்புகளின் அதிக வேலை குறைகின்றது. வைட்டமின் பி6, பி12 அதிகமாக கிடைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த சாதத்தினை மண் சட்டியிலோ அல்லது கல் சட்டிலோ நீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது சிறந்தது என இயற்கை மருத்துவத்திலும், ஆயுர் வேதத்திலும் அறிவுறுத்தப்படுகின்றது........!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top