Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விபச்சார பெண்ணாக மாறிய அமெரிக்க வீராங்கனை.???

விபச்சார பெண்ணாக மாறிய அமெரிக்க வீராங்கனை.???

அமெரிக்காவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்ற ஒரு வீராங்கனை காலத்தின் கோலமாக விபச்சாரப் பெண்ணாக மாறினார். இன்று தனது கதையை Fast Girl என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். அவரது பெயர் சூசி பேவர் ஹாமில்டன். 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பெண். தடகள வீராங்கனையாக திகழ்ந்தவர். ஆனால் காலப் போக்கில் இவர் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டார். கால் கேர்ள் ஆக மாறினார். 

எஸ்கார்ட் என்ற பெயரில் தொழிலதிபர்களுக்கு சந்தோஷம் தரும் பெண்ணாக செயல்பட்டார். 47 வயதாகும் சூசி இன்று தனது கதையை புத்தகமாக எழுதியுள்ளார். இவரது இத்தனை சோகத்திற்கும் காரணம் பைபோலார் டிஸ் ஆர்டர். அதுவே தன்னை செக்ஸ் பக்கம் இழுத்துச் சென்று விட்டதாக கூறுகிறார் லூசி. தனக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் பிரச்சினை இருப்பதை அப்போது உணரவில்லை என்றும் அது தன்னை வேறு விதமான கெட்டப் பழக்கங்களுக்கு இட்டுச் செல்லாமல் செக்ஸ் பக்கம் இழுத்துப் போனது ஒரு வகையில் நல்லதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். 

20 வயதில் இவர் செக்ஸ் ஒர்க்கராக மாறினார். அவரும் அவரது கணவர் மார்க்கும் விஸ்கான்சின் சென்றபோது இன்னொரு ஆணுடனும் சேர்ந்து மூன்று பேராக செக்ஸ் வைத்துக் கொண்டனர். அதுதான் அவரது முதல் விபச்சார அனுபவம். அதன் பிறகு அதையே தொழிலாக மாற்றி விட்டார் லூசி. கணவர் மார்க்குடன் வந்த அந்த நபரின் பெயர் பியர்ல். அவர் குறித்து லூசி கூறுகையில், பியர்ல்தான் எனது ஆரம்பத்திற்கு முதல் புள்ளி. 

அவரது அறிமுகத்தைத் தொடர்ந்து நான் கால் கேர்ள் ஆக முடிவு செய்தேன். 6 மாதம் இதற்காக மார்க்கிடம் அனுமதி பெற போராடினேன். அவர் அனுமதி கொடுத்தவுடன் கெல்லி என்ற பெயரில் எஸ்கார்ட் பெண்ணாக மாறினேன். லாஸ் வேகாஸ் எனது புது இருப்பிடமாக மாறியது. அடிக்கடி அங்கு சென்றுள்ளேன். ஒரு போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகையை விட அதிக தொகை எனக்குக் கிடைத்தது. 

எனக்கு ஒரு கட்டத்தில் செக்ஸ் மீது அலுப்பு வந்தது. இதையடுத்து அதிலிருந்து விலக விரும்பினேன். எனது அடையாளத்தையும் எனது வாடிக்கையாளர்களிடம் கூற ஆரம்பித்தேன். 2012ல்தான் நான் யார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இப்போது நான் எஸ்கார்ட் பெண் இல்லை. மீண்டும் அப்பாதைக்குத் திரும்புவதும் சாத்தயமில்லை. நான் எனது கதையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்த்துப் போராடப் போகிறேன். எனவேதான் புத்தகம் எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் சூசி.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top