Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாட்டி சொன்ன கதையை நிஜமாக்கிய காக்கா...(வீடியோ)

பாட்டி சொன்ன கதையை நிஜமாக்கிய காக்கா...(வீடியோ)

பானை ஒன்றில் இருந்த தண்ணீர் மேலே வர காகம் ஒன்று கற்களை எடுத்து உள்ளே போட்டது என்ற அறிவுப்பூர்வமான கதையை சிறுவயதில் நாம் கேட்டிருக்கிறோம். தற்போது அந்தக் கதையை உண்மையாகவே நிகழ்த்திக் காட்டி சபாஷ் வாங்கியுள்ளது ஒரு காக்கா. நாயைப் போலவே காகத்திற்கும் மக்களுக்கும் இனம் புரியாத ஒரு பாசம் உண்டு. நம் பாட்டிகள் சொல்லும் முக்கிய கதைகளில் தவறாமல் காகமும் இடம் பெற்றிருக்கும். மற்ற பறவைகளை விட தினமும் காகத்திற்கு சாப்பாடு வைப்போர் அதிகம். 

ஒரு காகத்துக்கு என்னதான் பிரச்சனை வந்தாலும் குடும்பமாக மற்ற காகங்கள், உடனடியாக அதற்காக குரல் கொடுக்கிறது. இக்காட்சிகளைப் பார்க்கும் போது, காகங்கள் நிஜமாகவே புத்திசாலியா? என்கிற கேள்வி அவ்வப்போது நம் மனதில் எழத்தான் செய்கிறது. இதன் புத்திசாலித்தனத்தை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் உறுதிப் படுத்தியுள்ளனர்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top