Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்கள் மட்டும் வாழும் அபூர்வ கிராமத்தை தெரியுமா.?

பெண்கள் மட்டும் வாழும் அபூர்வ கிராமத்தை தெரியுமா.?

கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து 380 கி.மீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் உள்ளது உமோஜா கிராமம். கடந்த 1990ம் ஆண்டு 15 பெண்கள் கூட்டாக இணைந்து இந்தக் கிராமத்தில் வாழத் தொடங்கினர். 

இவர்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆவர்.தற்போது இந்தக் கிராமத்தில் 47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top