Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பழனி பஞ்சாமிர்தம் விட்டிலேயே செய்வது எப்படி.?

பழனி பஞ்சாமிர்தம் விட்டிலேயே செய்வது எப்படி.?

பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் விளையும் பழத்தின் சுவையே பஞ்சாமிர்ததின் அடி நாதமாகும்.

அங்கு பழத்தின் உற்பத்தி குறைந்து விட்ட படியால் பழனி பஞ்சாமிர்தம் செய்ய வேறு பழங்களை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இன்று. சரி இப்பொழுது பழனி பஞ்சாமிர்தம் போல விட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போமா.....

தேவையான பொருள்கள் : 

பேரிச்சம் பழம்-10 
வாழைப்பழம்-5 
வெல்லம்-அரை கப் 
கல்கண்டு-கால் கப் 
உலர்ந்த திராட்சை-10 
தேன்-2 தேக்கரண்டி 
ஏலக்காய் பொடி-கால் தேக்கரண்டி 

செய்முறை:வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். 

பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவையான பழனி பஞ்சாமிர்தம் தயார்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top