Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


வாலிபரின் காதுக்குள் கரப்பான் பூச்சி!(அதிர்ச்சி வீடியோ)

வாலிபரின் காதுக்குள் கரப்பான் பூச்சி!(அதிர்ச்சி வீடியோ)

சீனாவில் வாலிபர் ஒருவரின் காதுக்குள் குடியேறி குடும்பம் நடத்திய கரப்பான் பூச்சியையும் 25 குஞ்சுகளையும் வெளியேற்றியுள்ளனர் டாக்டர்கள். அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகியுள்ளது. தென் கிழக்கு சீனாவைச் சேர்ந்த லீ என்ற வாலிபருக்கு சமீபத்தில் காதில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. 

காது மூக்கு தொண்டை நிபுணரைப் பார்த்து சிகிச்சைக்காக அட்மிட் ஆனார். வாலிபரின் காதினை பரிசோதனை செய்த டாக்டருக்கோ பயங்கர ஷாக். லீயின் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும் அவற்றின் 25 குட்டிகளும் அழகாக குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த மருத்துவருக்கு மயக்கம் வராத குறைதான். 

கரப்பான் பூச்சியின் குடும்பத்தால் வாலிபரின் காது துவாரம் முற்றிலும் அடைபட்டுப் போயிருந்தது. செவிக்கு பாதிப்பு இல்லாமல் நவீன சிகிச்சையின் மூலம் கரப்பான் பூச்சியையும் அவற்றின் குட்டிகளையும் சாமர்த்தியமாக வெளியே எடுத்தார் மருத்துவர் யங் ஜிங்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top