Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகின் மிகப்பெரிய இந்திய அரண்மனையை தெரியுமா?

உலகின் மிகப்பெரிய இந்திய அரண்மனையை தெரியுமா?

ராஜஸ்தானில் இருக்கும் அரண்மனைதான் 'உமைத் பவான் பேலஸ்' ஆகும். உலகின் மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றான இதைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் 'மார்வார்' ராஜ்யத்தின் தலைநகரமாகவும் விளங்கிய ஜோத்பூர் நகரில் அமைத்திருக்கிறது இந்த உமைத் பவான் அரண்மனை. ஜோத்புரின் மகாராஜாவாக இருந்த உமைத் சிங் என்பவரால் இது கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த அரண்மனை முழுவதுமே ஜோத்பூரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் 'சித்தார்' என்ற மஞ்சள் நிற பாலைவன கல்லினால் கட்டப்பட்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இந்த அரண்மனையை 'சித்தார் அரண்மனை' என்ற பெயராலும் அழைக்கின்றனர். இந்த அரண்மனையின் கட்டுமான பணிகள் 1929ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி துவங்கப்பட்டு கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் நடைபெற்றிருக்கின்றன. 

1943ஆம் ஆண்டு தான் இந்த அரண்மனை கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. இந்த உமைத் பவான் அரண்மனை இப்போது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த அரண்மனையின் ஒரு பகுதி 1972 ஆம் ஆண்டு முதல் 'தாஜ்' குழுமத்தினால் ஆடம்பர தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதை தவிர மற்ற ஒரு பகுதியில் ஜோத்பூர் அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

அவர்கள் பழங்காலத்தின் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கார்கள் போன்றவை கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் கலை மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாக இந்த அரண்மனை சொல்லப்படுகிறது. ராஜஸ்தானுக்கு வருபவர்கள் நிச்சயம் ஒருமுறையேனும் இந்த அரண்மனைக்கும் வர வேண்டும்.......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top