Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மது குடிக்கும் மற்றொரு மதுரை சிறுவன்..(பகீர் வீடியோ)

மது குடிக்கும் மற்றொரு மதுரை சிறுவன்..(பகீர் வீடியோ)

திருவண்ணாமலை அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் இன்னும் விலகாத நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஒரு சிறுவனை மது குடிக்க வைத்துள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. வாட்ஸ் அப்பில் வலம் வரும் அந்த வீடியோ காண்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் ஒன்றில் வாலிபர்கள் சிலர் மது அருந்திக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மூன்று வயது சிறுவன் அவர்களின் அருகில் அமர்ந்திருக்கிறான். 

டேய் சரக்கடிக்கிறயா என்று கேட்கிறான் ஒருவன். அவனுக்கு மதுபானத்தை டம்ளரில் ஊற்றுகின்றனர். பின்னர், ‘தண்ணிதான் குடிங்க பிரண்ட், குடிங்க பிரண்ட்‘ என்று உசுப்பேற்றுகின்றனர். அதை கேட்டு சிறுவன் செய்வதறியாது மழலை குரலில் அவர்களிடம் பேசுகிறான். தொடர்ந்து மதுபானம் இருக்கும் டம்ளரை சிறுவனிடம் வாலிபர் ஒருவர் நீட்டுகிறார். அப்போது அருகில் இருக்கும் நபர், அப்பனே பையனை குடிகாரனா மாத்துறானே என்று கேட்கிறான். அந்த சிறுவன் டம்ளரை வாங்கி முகர்ந்து பார்க்கிறான். 

அதற்கு ஒருவன், "மாப்ள கண்ணை மூடி கப்புன்னு ஒரு இழுப்பு இழு' என்று சிறுவனிடம் யோசனை கூறுகிறார். வேறுவழியின்றி சிறுவன் அப்படியே செய்கிறான். அதை சில வாலிபர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். ஒருவனோ அப்பனை மாதிரியே குடிக்கிறானே என்று கூறி சிரிக்கின்றனர். ‘டானிக் குடிக்கிற மாதிரி குடிக்கிறான் பாரு.. இவன் அப்பன் பெரிய குடிகாரன். அவனை மாதிரியே குடிக்கிறான் பார்' என்று சுற்றி நிற்கும் வாலிபர்கள் கிண்டல் செய்கின்றனர். 

ஒரு ஊறுகாய் மட்டையை சிறுவனிடம் கொடுத்து... " இந்தா ஊறுகாயை நக்கு... என்று சொல்கிறான் ஒருவன்... சிறுவனும் அவர்கள் சொல்வதை செய்கிறான். ‘அடுத்த ரவுண்டு அடி... அடி..' என்று பின்னால் இருந்து கூட்டாக குரல் எழுப்புகின்றனர். சிறுவனை பார்த்து, ‘சரக்கு இன்னும் வேணுமா' என்று ஒரு வாலிபர் கேட்கிறார். சிறுவனும் மெல்லிய போதையில் வேண்டும் என்பதுபோல் தலையசைக்கிறான். இந்த காட்சிகள் 2 நிமிடம் 15 விநாடி ஓடுகிறது. பார்ப்பவர்களை பதை பதைக்கச் செய்கிறது இந்த வீடியோ காட்சிகள்.......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top