Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -விமானத்தில் ஜல்சா ; லீக் செய்த விமான பணிப்பெண்!.

விமானத்தில் ஜல்சா ; லீக் செய்த விமான பணிப்பெண்!.

இங்கிலாந்து: விர்ஜின் அட்லான்டிக் நிறுவன விமானங்களில் நடைபெறும் அட்டகாசங்கள், ஆ ரக சம்பவங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் அதில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான 41 வயது மாண்டி ஸ்மித். கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக விர்ஜின் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஸ்மித். தற்போது அவர் கேபின் பீவர் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் ஓடும் விமானத்தில் என்னவெல்லாம் அக்கப்போர் நடக்கிறது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் ஸ்மித். 

விர்ஜின் ஏர்ஹோஸ்டஸ்ஸாக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மாண்டி ஸ்மித், தனது பணிக்காலத்தின்போது சந்தித்தவை குறித்து இந்த நூலில் விலாவாரியாக எழுதியுள்ளார். இந்த நூல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஓடும் விமானத்தில் நடப்பது கீழே பெரும்பாலும் தெரிவதில்லை. மது விருந்துகள், பெண்களுடன் கும்மாளம், ஆகியவை இதில் முக்கியமாக இடம் பெறுகின்றன. 

செக்ஸ் மிக மிக சாதாரணமாக நடக்கிறது. விமான ஊழியர்களுக்கு பயணிகளிடமிருந்து வரும் சங்கடங்களை பெரும் பட்டியலாக சொல்லலாம். ஒருமுறை மேலே உள்ள பெட்டியில் உள்ளதை எடுக்க நான் முயன்றபோது கீழே சீட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி எனது சட்டை வழியாக உள்ளே கை விட்டு நோண்டினார். ஒருமுறை ஒரு ஜோடி அரை நிர்வாணாக திடீரென எழுந்து ஓடியதைப் பார்த்துள்ளேன். இதெல்லாம் சின்ன உதாரணங்கள். 

இதுபோல நிறைய நடக்கும். துபாயில் இருந்தபோது ஒரு பெரும் கோடீஸ்வரருடன் விடிய விடிய விமானத்தில் பறந்தபடி சந்தோஷித்தேன். அவ் பெரிய கோடீஸ்வரர் ஆவார். பெர்சிய வளைகுடாவை நாங்கள் விமானத்தில் பறந்தபடி கழித்தோம். இரவு முழுவதும் இந்த லூட்டி நீடித்தது. அவரது பெயர் மிஹிர் அஸ்கர். தனது சொந்த விமானத்தில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். எனக்கு அது, நான் அனுபவித்த பல இன்ப இரவுகளில் ஒன்றாக அமைந்தது. 

நான் உலகின் பல நாடுகளிலும் விமானத்தில் பறந்தபடி உல்லாசமாக இருந்துள்ளேன். கரீபியா முதல் தென் ஆப்பிரிக்கா வரை ஊர் ஊருக்கு ஆள் இருந்தார்கள் எனக்கு. அப்போது எனக்கு ஜோனதன் என்ற பைலட் பாய் பிரண்டாக இருந்தார். அவரும் நானும் ஒருமுறை செஸ்னா விமானத்தில் பறந்தோம். அப்போது திடீரென எழுந்த நான் அவரது மடியில் போய் அமர்ந்தேன். பிறகென்ன உறவுதான்...! இருவரும் இணைந்து களித்தோம். 

ஆனால் ஜோனதனுடன் எனது உறவு நீடிக்கவில்லை. அவர் எனக்காக கமிட் செய்ய விரும்பவில்லை. எனக்கோ ஆண்களுக்குப் பஞ்சமில்லை. எனவே எளிதாக பிரிந்து விட்டோம். வேகாஸ் செல்லும் வழியில் கேட்விக் விமான நிலையத்தில் ஒரு டாக்டரைப் பார்த்தேன். இவர்தான் எனது கணவர் என்ற முடிவுக்கும் வந்தேன். அவருக்கும் என்னைப் பிடித்து விட்டது. இருவரும் அறை எடுத்தோம். விடிய விடிய திளைத்தோம். காலையில் எழுந்து பார்த்தால் பார்ட்டி எஸ் ஆகியிருந்தார்.! நான் உடைந்து போனேன். 

எனது கணவர் கிளன் கிடைக்கும் வரை எனது வாழ்க்கை சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அதெல்லாம் நீர்க்குமிழி போல என்பதை கிளனைப் பார்த்த பிறகுதான் உணர்ந்தேன். இப்போது எனது கணவர் மற்றும் மகளுடன் அர்த்தப்பூர்பவமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.. இது சந்தோஷமாக இருக்கிறது.. உண்மையான சந்தோஷமாக என்று கூறியுள்ளார் அவர்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top