Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கார் ஏறியும் உயிர் தப்பிய குழந்தை...(அதிர்ச்சி வீடியோ)

கார் ஏறியும் உயிர் தப்பிய குழந்தை...(அதிர்ச்சி வீடியோ)

இந்தியாவில் மகாராஷ்டிராவில் 3 வயது பெண் குழந்தை மீது கார் ஏறிய விபத்தில் அக்குழந்தை சிறுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.இக்காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் முக்கிய சாலையில் கடந்த ஜூன் 18ம் தேதியன்று வீட்டில் தாயுடன் வெளியே வந்து கொண்டிருந்த ஜோயா,3 என்ற சிறுமி, திடீரென சாலையை கடக்க முயன்றார். 

அப்போது வலது ஓரம் நின்றிருந்த கார் மெதுவாக நகர்ந்தது. அப்போது கார் ஜோயா மீது ஏறி இறங்கியது. இடது முன்பக்க, பின்பக்க டயர்கள் ஏறி இறங்கியதும் அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் காயமடைந்த குழந்தையை அதே காரில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவி்ல் அனுமதிக்கப்பட்டார். சில நொடிகளில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top