Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்களின் காதல் பார்வையை கண்டுபிடிப்பது எப்படி.?

பெண்களின் காதல் பார்வையை கண்டுபிடிப்பது எப்படி.?

ஆண்-பெண் பார்வை; ஆண்களுக்கு சுரங்கபார்வை என்ற திறன் உள்ளது. ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தும் குறிபார்க்க இது உதவுகிறது. இருந்தபோதும், குறிபிட்ட வட்டத்திற்கு அப்பால் உள்ள பொருட்களை அவர்கள் பார்க்க சிரமபடுகிறார்கள். உதாரணமாக, அலமாரி, பிரிஜ் போன்றவற்றில் உள்ள அறைகளில் அவர்கள் ஒரு பொருளைத் தேடுவது கடினமாக இருக்கிறது.

பெண்களுக்கு இது எளிதாக உள்ளது. பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறியமுடியாத படி,ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்து விட முடிகிறது. ஆனால், ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இதனால், குற்றம் சாட்டபடும் போது, பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.....

காதல் பார்வை;காதலர்கள் இருவரும் ஒருவர் கண்களை மற்றவர் ஊடுருவும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் கண்மணி விரிவடைந்திருப்பதைக் கவனிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவர் கண்கள் விரிவடைவதைக் கண்டுபரவசமடைகிறார்கள். ஒரு அறையின் குறுக்கே இருக்கும் ஒரு ஆணின் கவனத்தைக் கவர ஒரு பெண் அவனது பார்வையை 2 அல்லது 3 முறை சந்தித்து விட்டு வேறுபக்கம் அல்லது கீழே பார்ப்பாள்.

இந்த பார்வையே அவளது காதல் ஆர்வத்தை வெளிபடுத்த போதுமானதாக இருக்கிறது. வெஸ்டர்ஸ் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மோனிகா முர் நடத்திய ஆய்வில், ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்துகொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள். மெதுவாக புரிந்துகொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது என்று கண்டறிந்தார்.

கவர்ச்சி பார்வை;கண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. இதனால், அவர்களது புருவத்திற்கும், இமைக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாவதோடு, அவர்களுக்கு ஒரு `ரகசியமான தோற்றம்’ ஏற்படுகிறது.

உடலுறவில் உச்சகட்ட நிலையை அடைவதற்குமுன் பெண்களின் முகத்தில் இப்படிபட்ட பாவம் தெரியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மர்லின் மன்றோ, டெபோரோ ஹேரி, ஷேரன் ஸ்டோன் போன்ற கனவுக்கன்னிகளின் காதல் பார்வை முத்திரைகள் இவை.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top