Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கண்ணீருடன் சாமி கும்பிடும் குரங்கு..(பரபரப்பு வீடியோ)

கண்ணீருடன் சாமி கும்பிடும் குரங்கு..(பரபரப்பு வீடியோ)

கும்பகோணத்தில் புகழ்ப்பெற்ற தலமான வைத்தீஸ்வரன் ஆலயத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி முன்பு நான்கு நாட்களாக உணவருந்தாமல், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க குரங்கு ஒன்று அமர்ந்துள்ளது. அந்த குரங்கின் காணொளி காட்சி வாட்ஸ்-அப்பில் வேகமாகப் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு பத்ரகாளியம்மனுக்குத் தனிச் சன்னதி உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அக்கோயியின் முன்னர் அமர்ந்திருந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் குரங்குக்கு பால், பழம் கொடுத்தனர்.

ஆனால் அதனை எதுவும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுது கொண்டே அம்மனை பார்த்த படியே கண்ணீர் மல்கிய படி அமர்ந்துள்ளது. இது பக்தர்களையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரங்கினை பார்க்க பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இக்காட்சி பற்றிய காணொளி வாட்ஸப்பில் வேகமாகப் பரவி வருகிறது........!




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top