Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போலியான செல்போனை ஈசியா கண்டறிவது எப்படி.?

போலியான செல்போனை ஈசியா கண்டறிவது எப்படி.?

'ஏமாறுபவர்கள் இருக்கும் ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்வர்', 'ஏமாறுவது, ஏமாற்றுவது எல்லாமே இயற்கை' என்று சினிமா வசனங்கள் இருந்தாலும் உண்மையில் ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். நவீன உலகில் போலி என்ற விஷயம் கலந்து விட்ட நிலையில் தொழில்நுட்ப சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களை கண்டறிவது எப்படி என்பதை தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றீர்கள்.....

@புதிய மொபைல் போன்களை நன்கு பிரபலமான கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். முன்பின் தெரியாத கடைகளில் போலி ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனை செய்யப்படலாம். 

@இந்தியாவில் வெளியாகும் அனைத்து போன்களிலும் பிரத்யேக அடையாள எண் எனப்படும் ஐஎம்ஈஐ எண் அச்சடிக்கப்பட்டிருக்கும், இந்த எண் போனின் அட்டைப்பெட்டி மற்றும் போனின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாத போன்கள் கட்டாயம் வாங்கவே கூடாது. 

@போலி போன்களின் திரையை எளிதாக கண்டறிய முடியும், அவைகளின் தரம் மற்றும் பயன்படுத்தும் போதே அவை போலி என்பதை கண்டறிந்து விட முடியும். 

@போலி போன்களின் ஆடியோ தரம் இரைச்சலாக இருக்கும். இதனால் புதிய கருவிகளை வாங்கும் போது அதில் ஆடியோக்களை இயக்கி சோதிக்கலாம். 

@போலி போன்களின் இயங்கும்திறனை சோதிக்க அவைகளில் இருக்கும் செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கி பாரக்கலாம். இவ்வாறு செய்யும் போது அவை நிச்சியம் ஹேங் ஆகும். 

@விலை குறைவான மற்றும் போலி மொபைல் கருவிகளில் 1 அல்லது 2 ஜிபி மெமரியும் மட்டுமே வழங்கப்படும். இதனால் மெமரியை நன்கு சோதிக்க வேண்டும். 

@போலி போனில் 20 எம்பி கேமரா வழங்கப்பட்டிருந்தாலும் அதன் தரம் 2 எம்பி கேமரா போன்று தான் இருக்கும், முடிந்த வரை கேமரா தரத்தை கொண்டே போலி போன்களை கண்டறிய முடியும். 

@போலி போன்களின் பேட்டரி பெரும்பாலும் சீன நிறுவனங்களின் பேட்டரி தான் வழங்கப்பட்டிருக்கும். அவைகளை வைத்தும் போலி படைப்புகளை கண்டறிய முடியும்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top