Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மல்லிகையை பெண்கள் மார்பில் வைத்து தூங்கினால்.?

மல்லிகை பூவை பெண்கள் மார்பில் வைத்து தூங்கினால்.?

@மல்லிகைப் பூவை மார்பின் மீது வைத்துக் கட்டிக் கொண்டு படுப்பதால் இளந்தாய் மார்களுக்கு அதிகம் பால் சுரப்பால் ஏற்பட்ட வீக்கம் வலி குறைந்து போவதோடு பால் சுரப்பும் குறைந்து விடும்.

@மல்லிகைப் பூவை நீரிலிட்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவுவதால் சோர்வு நீங்கும். முகம் பளிச்சென்று அழகுறும். கண்கள் குளிர்ச்சி பெறுவ தோடு கண் சிவப்பு மாறும்.

@மல்லிகைப் பூவை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தீநீர் ஆக்கிப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் குடிப்பதால் வயிற்றுவலி குறைவதோடு இப்பானத்தை இரவில் படுக்கும் முன் சாப்பிட உறக்கத்தை தூண்டி விடும். மேலும் இது ஈரலுக்கு மிக்க பலத்தை தருவதாகவும் இருக்கும்.

@மல்லிகை மலரும், மல்லிகை அத்தரும் மணமிக்கதாகவும், குளிர்ச்சி தருவதாயும், லேசான மயக்கத்தை வருவிப்பதாகவும் இருப்பதோடு உடல் உறவில் ஊக்கமில்லாதவர்க்கும் ஓர் தூண்டுகோலாகவும், உடல் உறவுக்கு பலம் தருவதாகவும் விளங்குவதோடு பல்வேறு பால்வினை நோய்களுக்கும் பயன் தருவது.

@மல்லிகை பூச்சாறு வயிற்றுக்கடுப்பை போக்குவதோடு பேதி, சீதபேதி ஆகியவற்றையும் தணிக்க வல்லது......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top