Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சிக்கனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால்..?

சிக்கனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால்..?

சிக்கன் வகை உணவுகள் என்றால் அசைவப்பிரியர்கள் நன்றாக ருசிப்பார்கள். கடைகளில் எண்ணெயில் பொறித்து எடுத்து அழகாக பரிமாறப்படும் சிக்கனுக்கு ரசிகர்கள் ஏராளம். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும், இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது.

இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

சிக்கன் மட்டுமல்ல, இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top