Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மாடு, ஆடு தர்றேன் ஒபாமா உங்க மகளை தாரீங்களா.?

மாடு, ஆடு தர்றேன் ஒபாமா உங்க மகளை தாரீங்களா.?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகளைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்ய 50 மாடுகள், 70 ஆடுகள் தர தயாராக இருப்பதாகவும் கென்ய வழக்கறிஞர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ( 16). இவரைத் தான் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனே. இது தொடர்பாக தி நைரோபி பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார் கிப்ரோனே. 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒபாவின் மகளை பார்த்ததும் எனக்கு பிடித்துவிட்டது. எனது வாழ்க்கையில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் நான் காதலித்ததில்லை. அதனால் மலியாவுக்கு உண்மையாக இருப்பேன் என்பது நிச்சயம். இது தொடர்பாக அதிபர் ஒபாமாவுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். அத்துடன், ஒபாமா கென்யா வரும்போது, மலியாவையும் உடன் அழைத்து வர வலியுறுத்த உள்ளேன். அவர் இதற்கு ஒப்புக் கொண்டால், நான் எனது காதலை மலியாவிடம் தெரிவிப்பேன். 

அத்துடன் அதிபர் ஒபாமாவுக்கு 50 மாடுகள், மற்றும் 70 ஆடுகளை தருகிறேன். எனது கடிதத்தை தூதரகம் ஒபாமாவிடம் ஒப்படைக்க வேண்டும். மலியாவிடம் தற்கால முறைப்படி ஷாம்பேயின் ஒயினுடன் விருப்பத்தை தெரிவிக்காமல் பாரம்பரிய முறைப்படி எனது விருப்பத்தை வெளிப்படுத்துவேன். திருமணத்துக்கு பின்னர் மலியாவுக்கு பால் கறக்கவும், சோளக் கஞ்சி செய்யும் கெலேஞ்சின் பெண்களின் பாரம்பரியம் குறித்தும் கற்றுக் கொடுப்பேன்" என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ஒபாமாவின் பணம் மற்றும் செல்வாக்கிற்காக அவரது மகளைக் காதலிக்கவில்லை என்றும், மலியாவுடன் தான் எளிமையான வாழ்க்கை வாழ ஆசைப் படுவதாகவும் அப்பேட்டியில் கிப்ரோனே குறிப்பிட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு தான் இவர் முதன்முதலாக மலியாவைக் கண்டாராம். கண்ட நாள் முதலாகவே காதல் வளர்த்து வருகிறாராம்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top