Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பசும்பாலில் சோப்புத்தூள் கலப்படம் ; அதிர்ச்சி தகவல்!.

பசும்பாலில் சோப்புத்தூள் கலப்படம் ; அதிர்ச்சி தகவல்!.

நாடு முழுவதும் சுமார் 6 சதவிகித பாலில் சோப்புத்தூள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து பெறப்பட்ட 1,791 மாதிரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் 2011 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இவற்றில் 68 சதவிகிதம் மாதிரிகள் தரக்குறைவாக இருந்தது. 477 மாதிரிகளில் குளுக்கோஸ் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 103 மாதிரிகளில் பாலுடன் சோப்பு பவுடர் கலக்கப்பட்டிருக்கிறது. அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இனி எல்லாம் வீட்டிலேயே ஒரு மாட்டை வளர்த்து குழந்தைகளுக்கு பால் கொடுக்குறதுதான் பெஸ்ட்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top