Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -பேய் சம்பந்தமான திகில் கனவு ஏன் வருது தெரியுமா.?

பேய் சம்பந்தமான திகில் கனவு ஏன் வருது தெரியுமா.?

தனியாகப் படுத்திருந்தேன்.. அப்படியொரு கெட்ட கனவு... மொட்டை மாடியில் படுக்காதேடா... பேய் வந்து அழுத்தியது.. என்பார்கள். இப்படி பேய் அழுத்திய அனுபவம் பலருக்கும் உண்டு. (இது பேய் அல்ல) உடலில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது என்பது ஒரு புறமிருக்க, அதிகளவு உயிர்சக்தி சேர்ந்துவிட்டால் அது தூக்கத்தில் தானாகவே வெளியேறிவிடும். அந்த நேரத்தில் சிலருக்கு சுகமான கனவுகள் வருவதுண்டு. இதை பேய் அழுத்தியதாகக் கூறுவார்கள். 

மன இறுக்கம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இரவில் தானாகவே பேசிக்கொள்ளுவார்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள் சமயங்களில் பிதற்றுவார்கள். இவையெல்லாம் உள்ளம் சார்ந்த பிரச்சினைகள். அதெல்லாம் இருக்கட்டும். கனவுகள் ஏன் வருகின்றன? என்பதை இப்போது நாம் பார்போமா? 

கனவு வரவேண்டும் என்றால் தூக்கம் முக்கியம். ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டாலும் மறுநாள் நிம்மதியாகக் கழியாது. தூக்கமும் விழிப்பும் வாழ்க்கைச் சுழற்சியில் இன்றியமையாத செயல்பாடு. இது இல்லாவிட்டால் நமது பாடு பெரும்பாடு. வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. தினமும் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்தைக் குறைத்துக்கொண்டால் வாழ்நாளே சீக்கிரம் கழிகிறது. 

அப்படியொரு நிலை. தூக்கம், களைத்துப்போன உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கு இயற்கை ஏற்படுத்தியுள்ள விசித்திரமான அமைப்பு இது. மனிதனின் மூளைக்குள் பயாலாஜிக்கல் கிளாக் என்ற உயிரிக்கடிகாரம் உள்ளது. செல் தொகுதிகளால் ஆன இது, கண்நரம்புகளுக்கு மேலே அமைந்துள்ளது. நேர அளவுகளை விழித்திரைகள் உணர்ந்து கொள்வது இதனால்தான் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் நாம் இரவு-பகலை, நேர வித்தியாசங்களை வேறுபடுத்தித் தெரிந்துகொள்கிறோம். 

நேரமாச்சு, போய்படுங்கள் என்று நம்மை குட் நைட் சொல்லி தூங்கச் செய்வதும் இதுதான். நமது மூளையில் ஹைபோ தலாமஸ் சுரப்பிக்கு அருகில் பீனியல் கிளாண்ட் என்ற சுரப்பி உள்ளது. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்தான் மனிதனை உறங்க வைக்கிறது. மூளையானது உடலின் செயல்பாடுகள், காட்சிகள், கேட்டல், சிந்தனை இவற்றையெல்லாம் ஓய்வுபெறச் செய்து மெலடோனை ரத்தத்தில் கலக்கச்செய்து விடுகிறது. 

இதனால் உறக்கம் வந்து விடுகிறது. இதைப்போலவே உடலில் லாக்டிக் அமிலமும், அசிட்டைல் கோலின் என்ற வேதிப் பொருட்களின் அளவும் அதிகமாகும்போதும் உறக்கம் வந்து விடுகிறது. அதிகமாக உண்ணும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் மூளை லேசாக சோர்வடைந்துவிடுகிறது. இதனாலும் உறக்கம் வந்துவிடுகிறது. உறங்குபவர்கள் சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். 

நன்றாக ஆழ்ந்து உறங்குவோரும் இருபது நிமிடத்திற்கு ஒருமுறை புரண்டு படுக்கிறார்கள். இப்படி புரண்டு படுப்பது மட்டும் இருபது முதல் நாற்பது முறைவரை தினமும் நடைபெறுகிறது. ஒரே பக்கமாகப் படுத்திருந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல் அந்தப் பகுதியில் உணர்விழப்பு ஏற்படும். அதாவது மரத்துப்போகும். மனிதனின் உறக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு நிலையாகப் பிரிக்கிறார்கள்.

முதல் நிலையின்போது தூக்கம் கண்ணை சொக்கும். அதாவது உறங்கு வீர்கள்.. திடீரென விழித்துப் பார்ப்பீர்கள். இது முதலாவது நிலை. இரண்டாவது நிலையின்போது நன்றாக ஆழ்ந்து உறங்கி விடுவீர்கள். மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டு கொண்டிருக்கும். இந்த நிலையில்தான் உங்களுக்கு கனவுகள் வந்துகொண்டி ருக்கும். அதாவது கண்ணில் காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும். 

மூன்றாம் நிலை உறக்கத்தின்போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பீர்கள். நான்காம் நிலை மிக ஆழ்ந்த உறக்கம். இந்த உறக்கத்தின் போதுதான் கனவுகள் மாறி மாறிவரும். அதாவது கனவுலகில் முழுவதுமாக திளைத்திருப்பீர்கள். ஆழ்ந்த உறக்கத்தின் போதும், கண் அசைவு தூக்கத்தின் போதும்தான் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. மூளை வளர்ச்சியடைவது இந்த நேரத்தில் தான். 

உடலுக்குள் செல்களின் வளர்ச்சியின் போது தேவையற்ற செல்களை நீக்கி புதுச்செல்களை உருவாக்குவதும் செல்களை சீர் செய்வதும் இந்த நேரத்தில்தான். தூக்கத்தின்போது வேகமாக கண் அசைந்தால் கனவு காண்பதாகப்பொருள் என்று சொன்னேன் அல்லவா? குழந்தைகள் தூக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு கண்களை அசைத்து தூங்குவார்கள். இது அவர்கள் வளர வளர சரியாகிவிடும். 

ஒரு இரவில் ஒரே ஒரு கனவுதான் காண்போமா என்றால், இல்லை. பல முறை கனவு காண்போம். இந்தக் கனவுகள் நான்கு நிமிடம் முதல் சுமார் ஒன்னரை மணி நேரம்வரை கூட நீடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கனவுகள் மன நிலைகளாலும் வருகின்றன. மனம் என்பது மூளையிலா? இதயத்திலா என்று விவாதிக்காதீர்கள். மனம் இதயத்தில் இல்லை. அது மூளையில் உள்ளது. 

இது மூளையின் தனிப்பட்ட பகுதியல்ல. மூளையில் உள்ள பல்வேறு பகுதிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளின் ஒரு கூட்டுத்தொகுதி அல்லது அமைப்பு தான்மனம். ஆக, எந்தெந்த பகுதிகளின் பணிகள் மூளையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவையெல்லாம் விழி நரம்புகளில் அதிர்வுகளாகத் தெரிக்கும். இந்த நேரத்தில்தான் அவை சார்ந்த கனவு கள் வருகின்றன. மனஇறுக்கம், நோய்கள், கவலை, கோபம், சந்தேகம் போன்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளும் கனவுகளாக வரும். 

இந்த கனவுக ளின் மூலம் மன இறுக்கம், மன அழுத்தம், ஆசை, துக்கம், கோபம் அன்பு போன்ற அனைத்துக்கும் வடிகால் ஏற்பட்டு மனம் நிம்மதி பெறுகிறது. தூங்கும் முன்பு குழப்பத்தில் இருந்தவர்கள் விழித்தபின் தெளிவடைவது இதனால் தான். நிகழ்ச்சிகள்மட்டுமின்றி உணவு முறைகளும்கூட கனவுகளுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜிரணிக்கப்படாத உணவுகள், கண்ட கண்ட உணவுகளை உண்பதுகூட திகில் கனவுகளுக்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

சில கனவுகள் பலித்துவிடுகின்றனவே என்பார்கள். பறப்பது போல கனவு கண்டால் சிந்தனையில் பறக்கலாமே தவிர உடலால் பறக்க முடியாது. அதைப் போல கைலாயத்தில் சிவனோடு பேசிக் கொண்டி ருப்பதைப்போல கனவு கண்டால் அந்த இடத்திற்குப் போக முடியாது. கனவு நம் எண்ணத்தின் ஓட்டம், மனதில் ஏற்படும் பிரச் சினைகளின் அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். அடிக்கடி வரும் திகில் கனவுகள் கண்டிப்பாக மனநோயின் விளைவாக இருக்கக்கூடும். 

மன நல மருத்துவரை அணுகவேண்டும். இப்படிப்பட்ட தொல்லைகள் வரக்கூடாது என்பதால்தான் இரவில் அதிகமாக, கண்டதை சாப்பிடாமல் குறைவாக, மித உணவாக சாப்பிட்டு, மனதை இளகு வாக்கி படுக்கச்செல்லவேண்டும் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். உறங்கும் முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் பெரியோர்.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top