Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி கதறிய பெண்!.

தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி கதறிய பெண்!.

பக்ரெய்னில் பணிப்பெண்ணொருவர் பலாத்காரத்திற்கு ஆளான நிலையில் பேஸ்புக்கின் மூலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது; பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எபே லூனா (வயது 28) என்ற பெண் பக்ரெய்னில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார்.

பின்னர் இந்த வீடியோ காட்டுத் தீ போல பரவியிருந்தது. மேலும் பல்லாயிரக் கணக்காணோர் இதனை பகிர்ந்திருந்தனர். இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கப்பட்டுள்ளார். 

இந்தக் வீடியோவில் லூனா தெரிவித்திருப்பது:- தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை வல்லுறவுக்குட்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நான் வெளியே வர உதவி செய்யுங்கள், இப்போது நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார். அதனால் காலில் காயமேற்பட்டுள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார் என கூறி உள்ளார்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top