Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஜெயா டிவி நிருபரை கொல்ல முயன்ற விஜயகாந்த்.??


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, பல கட்சியின் தலைவர் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பு தொடங்கிய சில நிமிடங்களில் ஜெயா டிவி நிருபர், "பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு நிலவுகிறதே. இந்த நேரத்தில் தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளை தில்லிக்கு அழைத்து வந்துள்ளீர்களா?' எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, விஜயகாந்த், "இந்த நிருபர் ஆளும் கட்சி டிவி நிருபர். இவருக்கு பதில் அளிக்க மாட்டேன்' என்றார். மேலும் தனது ஸ்டைலில் கைகளை முறுக்கி அவரை அடிக்கவே எழுந்து விட்டார் அப்போது, விஜயகாந்த் ஆதரவாளர்கள் அந்த நிருபரை செய்தியாளர் சந்திப்பில் இருந்து விலகியிருக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கு சக பத்திரிகையாளர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெயா டிவி நிருபர், அவருக்கு ஆதரவாக பேசிய நிருபர் ஆகியோருக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் இருந்து விஜயகாந்த் பாதியிலேயே வெளியேறினார். அடிக்கடி இப்படி டென்ஷன் ஆனா, நாளை ஒரு வேலை ஆட்சியில் அமர்ந்தால், நிறைய பேர் உதை வாங்குவார்கள் போலிருக்கிறதே இப்படி பட்ட வீரமான தலைவர்கள் தான் தமிழ்நாட்டுக்கு தேவை தேவை.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top