Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தொலைந்த ஆன்டிராய்டு போனின் IMEI கண்டுபிடிக்க.?

தொலைந்த ஆன்டிராய்டு போனின் IMEI கண்டுபிடிக்க.?

ஸ்மார்ட்போன்களை ரெஜஸ்டர் செய்யும் போதும் அல்லது ஆன்லைன் மூலம் மொபைலை விற்கும் போதும் உங்களது மொபைல் போனின் IMEI நம்பர் தேவைப்படும். IMEI நம்பர் என்பது சர்வதேச மொபைல் குறியீட்டு எண் ஆகும், இதன் மூலம் தொலைந்த போன மொபைல்களை கண்டுபிடிக்க அல்லது முடக்க முடியும். அவ்வாறு தொலைந்து போன உங்கள் ஆன்டிராய்டு போனின் IMEI நம்பரை தெரிந்து கொள்வது எப்படி என்று பாருங்கள்.....

ஆன்டிராய்டு போன் வைத்திருப்பவர்கள் போன் தொலைந்து போனாலும் IMEI நம்பரை தெரிந்து கொள்ள முடியும். ஆன்டிராய்டு போனில் பயன்படுத்தப்பட்ட கூகுள் அக்கவுன்ட் மூலம் கூகுள் டேஷ் போர்டில் லாக் இன் செய்ய வேண்டும். அங்கு பச்சை நிற ஆன்டிராய்டு லோகோவின் பக்கத்தில் இருக்கும் ஆன்டிராய்டு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் கூகுள் அக்கவுன்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருவிகளின் IMEI நம்பரை காண்பிக்கும். 

மேலும் எவ்வித போன் ஆனாலும் அதன் IMEI நம்பரை கண்டறிய இந்த கோடை பயன்படுத்தினால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.உங்களது மொபைல் போனில் இருந்து *#06# என டைப் செய்து கால் பட்டனை அழுத்தினால் உங்களது போனின் IMEI நம்பர் ஸ்கிரீனில் தெரியும்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top