Select Menu
  • Home
  • News
  • Cinema
  • Sri Lanka
  • Tech
  • Tamil Fm
  • Chat Room
  • Tamil Typing
  • Top 18 post
  • Daytamil »
  • Home
  • Advertise with us
  • Contact us
Day Tamil | Tamil News | Online Tamil News | Tamil Portal | தமிழ் செய்திகள் | டே தமிழ்
  • Home
  • News
    • Tamil Latest News
    • Tamil Cinema News
    • Tamil Srilanka News
    • Tamil Tech News
  • Tamil Fm
  • Tamil Chatrooms
  • Tamil Typing
  • Top 18 Post...
Home அதிசய உலகம் மருத்துவம் வினோதம் சிறுநீரின் நிறம் மாறினால் என்ன பிரச்சனை தெரியுமா.?

சிறுநீரின் நிறம் மாறினால் என்ன பிரச்சனை தெரியுமா.?

 Friday, 20 February 2015     அதிசய உலகம் , மருத்துவம் , வினோதம்    
சிறுநீரின் நிறம் மாறினால் என்ன பிரச்சனை தெரியுமா.?

சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற போகிறோம். சில சிறுநீர் நிறங்களை பற்றியும், உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்படுத்தி பார்க்கையில் அதற்கான அர்த்தங்களையும் இப்போது பார்க்கலாம். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.......... 

தெளிவாக தெரிதல்;உங்கள் சிறுநீர் தெளிவாக தெரிந்தால், நல்ல நீர்ச்சத்துடன் உள்ளீர்கள் என்பதை அது குறிக்கும். அளவுக்கு அதிகமான நீர்ச்சத்து என்றால் நீங்கள் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என அர்த்தமாகும். இதனால் உடலில் உள்ள உப்புகளை நீர்த்து போக செய்து உடலுக்கு தீங்கை விளைவிக்கிறீர்கள். இது எந்த ஒரு ஆபத்தான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது தான். ஆனாலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என உடலை கஷ்டப்படுத்தாதீர்கள். 

நிறமில்லாத சிறுநீர்;நல்ல தெளிவாக, நிறமே இல்லாமல் சிறுநீர் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். ஆம், உங்கள் சிறுநீரில் நிறமே இல்லையென்றால், அது சர்க்கரை நோய்க்கான அறிகுறியாக தான் இருக்கும். தொடர்ச்சியான தாகம் மற்றும் தொடர்ச்சியான சிறுநீர் கழித்தால் ஆகியவை இதற்கான மற்ற அறிகுறிகளாகும். 

வைக்கோல் நிற சிறுநீர்;வைக்கோல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சிறுநீர் ஆரோக்கியமாக உள்ளது என அர்த்தமாகும். ஆனால் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறிக்கொண்டே போனால் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருகிறது என அர்த்தமாகும். நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டி வரும். 

பழுப்பு நிற சிறுநீர்;உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருந்தால், சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறும். நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறலாம். உங்கள் நுரையீரல் சரியாக செயல்படவில்லை என்றால், மலம் மூலமாக வெளியேற வேண்டிய பித்த உப்புகள் சிறுநீர் வழியாக வெளியேறும். அதற்கு காரணம் இரத்தத்தில் அவைகள் அடர்த்தியாக இருப்பதே. ஹெபடைடிஸ் (ஈரல் அழற்சிபறை) எனப்படும் நுரையீரல் அழற்சி, இதற்கான ஒரு உதாரணமாகும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் கூட இப்படி ஏற்படலாம். அதனால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. 

சிவப்பு நிற சிறுநீர்;சிறுநீரில் இரத்தம் கலக்கும் போது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேற்றும் . இதனை ஹீமெச்சூரியா என கூறுகிறார்கள். சிவப்பு என்றாலே பொதுவாக எச்சரிக்கைக்கான நிறமாகும். சிறுநீரக பாதையில் தொற்றுக்கள், கிட்னி மற்றும் சிறுநீர்ப்பைகளில் கற்கள், கிட்னி, புரோஸ்டேட் அலது சிறுநீர்ப்பையில் புற்று நோய் போன்ற காரணங்களால் இரத்த கசிவும் சிவப்பு சிறுநீரும் வெளியேறும். இந்த நிலை ஏற்படும் போது சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். பீட்ரூட், ப்ளாக்பெர்ரி மற்றும் இளவேல் சீனி போன்ற உணவுகள் இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் உணவுகளால் இந்த நிறம் மாற்றம் ஏற்படாமல், பல முறை நடந்தால், அது ஆபத்தான உடல்நல பிரச்சனையாக கூட இருக்கலாம் 

நீல நிற சிறுநீர்;இந்த அரிதான நிலையை பார்ஃபிரியா என கூறுவார்கள். இது ஒரு மரபுரிமை என்சைம் நிலையாகும். இது ஒருவரின் சிறுநீர் நிறத்தை நீலம் அல்லது ஊதா நிறத்தில் மாற்றும். இருப்பினும், இந்த சிறுநீரில் நீலம் கலந்த இளஞ்சாயம் தென்படும். இது சாயங்கள் கலந்துள்ள சில உணவுகள் மற்றும் மருந்துகளை உண்ணுவதாலும் கூட ஏற்படலாம். ட்ரையம்டெரென் அல்லது வயாக்ரா போன்ற மாத்திரைகளை உண்ணுவதால் சிறுநீர் நிறம் இப்படி மாறும். 

பச்சை நிற சிறுநீர்;சிறுநீரில் சீழ் இருந்தால், சிறுநீர் பச்சை நிறத்தில் வெளியேறலாம். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிறுநீரக பாதை தொற்றுக்கள் தான். தண்ணீர் விட்டான் கொடி போன்ற உணவுகளாலும் கூட இது ஏற்படலாம். இவைகளை சாப்பிட்ட பின் சிறுநீர் கழிக்கையில் ஒரு வித மனமும் உண்டாகும். கருப்பு அதிமதுரம் அல்லது குடல்களில் உறிஞ்சப்படாமல் இருக்கும் அடர்த்தியான நிறங்களை கொண்டுள்ள சில உணவுகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆண்டி-பையாடிக்ஸ் போன்ற சில மருந்துகளை உண்ணுவதாலும் கூட சிறுநீர் பச்சையாக வெளியேறும். 

பால் நிற சிறுநீர்;நுண்ணிய இரத்தம் இருப்பதால் பால் நிறத்திலான சிறுநீர் வெளியேறலாம். சிறுநீர் பாதையில் தொற்று, பித்தப்பை தொற்று அல்லது கிட்னி கற்கள் போன்றவைகளாலும் கூட இது ஏற்படலாம். வெட்டை நோய் போன்ற பாலியல் ரீதியான நோய்களால் கூட உங்கள் சிறுநீரின் நிறம் மாறலாம். யோனிமடற்கழிவு ஏற்பட்டாலும் கூட சிறுநீர் பால் நிறத்தில் வெளியேறும்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Smiley face
Ads by Ujiladevi

tamil hot news


Featured Post

ஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை!.

Blog Archive

Popular Posts

  • தொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்!.


உஜிலாதேவி பார்க்க படிக்க
    அஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை

Find Us On Facebook

உஜிலாதேவி
Day Tamil © 2012
Day Tamil is a tamil news Portal offering online tamil news, Day Tamil movie news , Day Tamil blogs, Day Tamil bookmarks,Day Tamil pictures, Day Tamil astrology, Day Tamil videos, Day Tamil art culture,Day Tamil literature, Day Tamil sports news in tamil, Day Tamil recipes,Day Tamil kollywood, Day Tamil chennai classifieds, Day Tamil business, Day Tamil latest Tamil Nadu politics news and more

Daytamil »