Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


மயக்க பொடி போட்டு வாலிபர்களை மயக்கிய பெண்...

மயக்க பொடி போட்டு வாலிபர்களை மயக்கிய பெண்...

இப்படித்தான் வாழ வேண்டும் என்று தங்களுக்குள் சில வரைமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள் ஒரு ரகம். இது போன்றவர்கள் ஓரளவுக்கு நேர்மையுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்தவித சிக்கலுமின்றி இந்த நாணயமானவர்களின் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். 

மற்றவர்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் எனக்கென்ன என்று எண்ணுபவர்கள் இவர்கள். இது போன்ற மனநிலையில் இருப்பவர்கள் தலை முடியை கட்டி, மலையையும் இழுத்து விடலாம் என்று நினைப்பார்கள். இது போன்ற எண்ண ஓட்டத்தில் காலம் தள்ளும் இவர்கள், பின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் செயல்படுபவர்களாகத்தான் இருப்பார்கள். ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் அதை பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். 

சென்னை முகப்பேர் பகுதியில் தங்கியிருந்து மயக்க பொடி போட்டு வாலிபர்கள் பலரை மயக்கி கைதாகி இருக்கும் சாகசப்பெண் காயத்திரியும் அந்த ரகம் தான். இதுவரை 4 பேரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து ஏமாற்றிய காயத்திரி முறைப்படி 5–வது திருமணத்துக்கு தயாரான போது போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார். அப்போது காயத்திரி கூறிய வார்த்தைகள் இவை, "அவர்களாகத்தான் என்னிடம் வருகிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

"தற்போது சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சீனிவாசனை 4–வதாக ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காயத்திரி என்ற பெயரில் பிடிபட்டிருக்கும் விதவிதமான பெயர்களில் வலம் வந்து மை போட்டு மயக்கி இருக்கிறார் இளைஞர் பட்டாளங்களை. இனி... காயத்திரியின் தில்லாலங்கடி வேலைகளை பார்ப்போம். கோவையை சேர்ந்த காயத்திரியின் நிஜப்பெயர் உமா. ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவர், "கல்யாண ராணி"யாக மாறியிருக்கிறார். 

இதற்கு இவர் தேர்வு செய்த தளம் தான் இணையதளம். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி ஆண்களை அடிமையாக்கும் காயத்திரிக்கு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளும் அத்துப்படி. யாரை... எப்படி... மயக்க வேண்டும் என்பதில் இவர் பி.எச்.டி.யே முடித்திருப்பார் போல் தெரிகிறது. ஆண்களை ஏமாற்றும் அத்தனை வித்தைகளையும் கைதேர்ந்த முறையில் கற்று வைத்திருக்கிறார் இவர். கடந்த 2010–ம் ஆண்டு காயத்திரி வீசிய வலையில் முதலில் சிக்கியவர் நரசிம்மராவ் என்ற காண்டிராக்டர். 

அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திய காயத்திரி ரூ.2 லட்சம் பணத்தை கறந்து விட்டு, நரசிம்மராவுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறி விவகாரத்து பெற்று கம்பி நீட்டினார். 2–வதாக 2012–ம் ஆண்டு காயத்திரியின் விழி வீச்சில் வீழ்ந்தவர் ரவிக்குமார். திருச்சியை சேர்ந்த அவரிடம் ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டி விட்டு விவகாரத்து கேட்டு வழக்கு போட்டார். அது கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. 

இதன் பின்னர், அடுத்த ஆண்டே காயத்திரியின் மோசடி வேட்டையில் ராஜகோபால் என்ற கோவில் பூசாரி சிக்கினார். அவரையும் மந்திரம் போட்டு மயக்கிய காயத்திரி ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகையை சுருட்டினார். இதன் பின்னர் 4–வது ஆளாக சிக்கிய சீனிவாசன் தான் காயத்திரியின் வண்டவாளங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இணைய தளம் மூலமாக பெண் தேடிக்கொண்டிருந்த சீனிவாசனை, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திய காயத்திரி, கோவையில் எனக்கு கொஞ்சம் கடன் இருக்கிறது. 

ரூ.50 ஆயிரம் பணமும், 5 பவுன் நகையும் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் ரகசிய விசாரணையில் இறங்கினார். அப்போதுதான் காயத்திரி ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்திருப்பதும், 5–வதாக அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரை மணமுடிக்க திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்தது. 

சீனிவாசனின் புகாரில் காயத்திரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். 10 பேர் வரை காயத்திரியின் மோசடி வலையில் விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காயத்திரி சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் அவரது ஆட்டத்தை அடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். அப்பாவி ஆண்களே... உஷாராக இருங்கள். இது போன்ற பெண்களிடம்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top