Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.?

அடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.?

அடுத்த பிறவியில் இந்த நாய் மனுஷனா பிறக்குமோ.? இங்கிலாந்தில் உள்ள Staffordshire பகுதியில் வசிக்கும் 56 வயதான Janet Burton, Rupert என்று பெயரிட்ட செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். ஆறறிவு படைத்த மனிதன் தனது அன்றாட கடமைகளை செய்வதற்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கும் வேளையில் இந்த ஐந்தறிவு மிருகம் தனது வேலைகளை தானே கவனித்துக்கொண்டு, எஜமானியின் பல வேலைகளுக்கும் உதவியாக இருந்து வருகிறது. அயர்ன் பண்ணுவது, கார் துடைப்பது, எஜமானரின் வீட்டுக்கு முன் படர்ந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுவது, காலை பத்திரிகை படிப்பது என பல வகைகளில் Rupert புத்திசாலியாக இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. 

Rupert-ன் புத்திசாலித்தனம் குறித்து Janet கூறுகையில், நான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை பார்க்கும் Rupert, தனது இரு கால்களை மேலே தூக்கி வைத்து அதனை உற்று கவனிப்பான். அவனது முகபாவனைகளை பார்க்கும் போது, நான் செய்யும் வேலைகளை அவன் உன்னிப்பாக கவனிப்பது தெரிந்தது. பின்பு அவனும் அவ்வேளையை செய்வான். அந்த அளவுக்கு புத்திக்கூர்மை உள்ளவன் Rupert என்றார். ஒருவேளை அடுத்த பிறவியில் மனுஷனாய் பிறக்குறதுக்கு இந்த பிறவியிலேயே ட்ரைனிங்கொ என்னவோ......! 



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top