Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



துணி கறை விலக..(இல்லத்தரசிகளே இது உங்களுக்கு)

துணி கறை விலக..(இல்லத்தரசிகளே இது உங்களுக்கு)

*சட்டையில் தார் கறை பட்டுவிட்டால் துவைப்பதற்கு முன் கொஞ்சம் மண்ணெண்ணெயைத் தார் பட்ட இடத்தில் தேய்த்து பின்னர் சோப்புப் போட்டுத் துவைத்தபின் ஒரு துண்டு எலுமிச்சைப் பழம் பிழிந்து அலசிக் காய வைத்தால் தார் கறை அடியோடு போய்விடும். 

*துணியில் வெற்றிலைக் கறை படிந்தால் உடனே நீரில் அலசினால் கறை நீங்கிவிடும். கறைபிடித்து வெகுநேரம் ஆகிவிட்டால் சுண்ணாம்பு நீரை அதன்மீது ஊற்றித் தேய்த்துக் கசக்கிப் பிழிந்தெடுத்தால் கறை இல்லாமல் போய்விடும். 

*துணிகளைத் துவைக்கும்போது ஒரு துணியில் இன்னொரு துணியின் சாயம் பட்டுவிட்டால், கொஞ்சம் கடுக்காயை ஊற வைத்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்தால் அது போய்விடும். 

*வெள்ளைத் துணிகளைத் துவைக்கும்போது சிறிது உப்பைத் தண்ணீரில் சேர்த்துக்கொண்டால் துணிகள் தூய வெண்மையாக மாறிவிடும். 

*வாஷிங் மிஷினில் துணி துவைக்கும்போது காலியான ஷாம்பூ பாட்டிலைக் கழுவி அந்தத் தண்ணீரைவிட்டு சலவை செய்தால் துணிகள் "பளிச்' சென்று நல்ல வாசனையாக இருக்கும். 

*பட்டுத்துணிகளைத் துவைத்து அலசும்போது அந்த நீரில் ஒரு கரண்டி கிளிசரினைக் கலந்து அலசி நிழலில் உலர்த்தினால் சுருக்கம் இல்லாமல் இருக்கும். 

*துணியில் ரத்தக்கறை பட்ட இடத்தில் சுடுநீரில் உப்புப் போட்டுக் கரைத்து ஊற்றி துணியைத் துவைத்தால் கறை போய்விடும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top