Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகின் பெரிய கப்பலை இலவசமா சுற்றி பார்க்கணுமா?

உலகின் பெரிய கப்பலை இலவசமா சுற்றி பார்க்கணுமா..?

உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான ஆல்யூர் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஸ்ட்ரீட் வியூ உதவியுடன் இந்த வசதியை ராயல் கரிபீயன் க்ரூஸ் லைன்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுவரை புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடிந்த இந்த கப்பல் தற்போது 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது கப்பலுக்குள் நிஜமாகவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். 

அனைத்து வசதிகளையும் தன்னகத்தே உடைய இந்த கப்பலை மிதக்கும் நகரமாக வர்ணிக்கின்றனர். 362 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 6,296 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கப்பலில் உள்ளன. கப்பலில் இருக்கும் தங்கும் அறைகள், நீச்சல் குளம், மலையேற்றப் பகுதி, சினிமா திரையரங்குகள், ஓட்டல்கள், சாப்பாட்டுக்கூடம், விளையாட்டுக் கூடங்கள், பூங்கா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் பார்க்க முடியும்.

இந்த உல்லாச கப்பலுக்கு பயணிகளை கவரும் விதத்திலேயே இந்த வசதியை ராயல் கரீபியன் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பயண செய்யப் போகும் கப்பல் எப்படியிருக்கும் என்பதை நிஜமாகவே உணரும் விதத்தில் இந்த சிறப்பு வசதியை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆலூர் ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பலை கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top