Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பள்ளி சிறுவனுடன் காமவெறியாட்டம் ஆடிய ஆசிரியை...

பள்ளி சிறுவனுடன் காமவெறியாட்டம் ஆடிய ஆசிரியை...

இங்கிலாந்தைச் சேர்ந்த பஞ்சாபி பாடகரான மல்கித் சிங்கின் மகள் தான் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரபல பஞ்சாபி பாடகரான மல்கித் சிங். அவரது மகள் அமர்தீப் போபாரி(28). அவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். 

அவர் தனது பள்ளியில் படிக்கும் கற்றல் குறைபாடு உள்ள 16 வயது சிறுவனுடன் உடல் உறவு கொண்டுள்ளார். இந்த குற்றத்தை அவரே ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. 2013ம் ஆண்டு காதலர் தினத்தில் இருந்து அமர்தீப் சிறுவனுடன் உறவு வைத்துள்ளார். 

அவர் சிறுவனுடன் சேர்ந்து வகுப்பறையில், அவரது காரில், பள்ளிக்கு அருகே உள்ள பகுதியில் உறவு கொண்டுள்ளார். சிறுவனுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவரை தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சிறுவனுக்கு தனது வயதில் ஒரு சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அமர்தீப்பிடம் தனக்கு காதலி கிடைத்துவிட்டதாகவும் இந்த உறவை முடித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் இந்த சம்பவம் பற்றி பிறருக்கு தெரிய வந்துள்ளது........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top