Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கதவே இல்லாத கிராமத்தில் திருட்டே நடக்காத மர்மம்!.

கதவே இல்லாத கிராமத்தில் திருட்டே நடக்காத மர்மம்!.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டம் நெவாஸா தாலுகாவில் உள்ளது சனி ஷிங்னாபூர் கிராமம். அந்த கிராமத்தில் வங்கி, வீடுகள் என எதற்கும் கதவு கிடையாது. சனி பகவான் தங்களை பாதுகாப்பார் என்று மக்கள் நம்புவது தான் வீடுகளுக்கு கதவு இல்லாமல் இருப்பதற்கு காரணம். பல தலைமுறையாக இந்த கிராமத்தில் வீடுகளுக்கு கதவே இல்லாமல் உள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு சனி பகவான் பக்தர்களின் கனவில் வந்து வீடுகளுக்கு யாரும் கதவை வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார். நான் உங்களை எல்லாம் பாதுகாக்கையில் கதவுகள் எதற்கு என்று கேட்டார்.

அதனால் அன்றிலிருந்து வீடுகளுக்கு கதவுகள் இல்லாமல் உள்ளது என்று கூறியுள்ளனர். வீடுகள் தவிர்த்து அந்த கிராமத்தில் உள்ள வங்கிக்கு கூட கதவு இல்லை.இதில் என்னொரு மர்மம் என்ன வென்றால் இதுவரை இங்கு ஒரு திருட்டு கூட போகாததுதான்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top