Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பெண்களே திருமணத்திற்கு முன் உறவு கூடாது ஏன்.?

பெண்களே திருமணத்திற்கு முன் செக்ஸ் கூடாது ஏன்.?

காமம் என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், இந்தக் காலத்து சின்னஞ் சிறுசுகளுக்கு, முக்கியமாக டீன்-ஏஜ்ஜில் உள்ளவர்களுக்கு, காமத்தை ஒரு விளையாட்டாகவே ஆகிவிட்டது. வாழ்க்கைக்குத் தேவையான காமம் என்பது முறையாகத் திருமணம் ஆன பின்பு மட்டுமே ஆண்-பெண் இருவர் மனத்திலும் வர வேண்டும். காதல் என்பதைத் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இனக் கவர்ச்சிக்கு அடிமையாகி, வயிற்றில் கருவைச் சுமந்து கொண்டு தவிக்கும் எத்தனையோ இளம் பெண்கள் கடைசியில் வாழ்க்கையை தொலைத்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏன் உறவு கூடாது என்பதற்காக காரணங்கள்..... 

*நம் வாழ்க்கைத் துணையை முறையாகத் திருமணம் செய்து கொண்ட பின்பே அவனை கட்டிலில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும். அப்போது தான் இருவருக்குமிடையே அன்பும் அதிகரிக்கும். 

*காமம் என்பது ஒரே இரவில் முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல. அதற்காக ஒரு சர்ப்ரைஸோடு காத்திருத்தல் அவசியம். அதற்கு, திருமணம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். 

*இந்தக் காலத்தில் காம உறவு தொடர்பான பல வியாதிகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், திருமணத்திற்கு முன் உறவு கண்டிப்பாகத் தவிருங்கள். 

*நீங்கள் டேட்டிங் தொடர்பு வைத்துள்ள நபருக்கு உங்கள் கவர்ச்சி பிடிக்காமல் போயிருக்கலாம். சந்தோஷமாக குட்-பை சொல்லிவிட்டு வந்து விடுங்கள். உறவு பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். 

*தகாத முறையில் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொண்டால், அது தொடர்பான வியாதிகளை நீங்களும் பரப்புவதற்குக் காரணமாகி விடுவீர்கள். அதாவது, செக்ஸ் வியாதிகள் ஏற்கனவே உங்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ நேரிடும். 

*திருமணத்திற்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அதனால் ஏற்படும் கர்ப்பம் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். திருமணத்திற்கு முன் ஏற்படும் கர்ப்பத்தால் ஆண்கள் உங்களை கழற்றி விடவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்வதை பெண்கள் தவிர்ப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top