Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தனிமையில் சந்தித்த காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரிதம்!.

தனிமையில் சந்தித்த காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரிதம்!.

ஐதராபாத் புறநகர் பகுதியில் காதலனை தாக்கி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இரண்டு வாலிபர்கள் தற்போது போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பெத்தா அம்பர் சேட் என்ற இடத்தில், கடந்த திங்கட்கிழமை 22 வயது இளம்பெண் தனது காதலனுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த 2 வாலிபர்கள், அவர்களிடம் தங்களை போலிசார் எனக்கூறியதோடு அந்த பெண்ணின் காதலனை அடித்துள்ளனர். பின்னர் விசாரணை என்ற பெயரில் அந்த இளம் பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று 2 வாலிபர்களும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணின் கைப்பேசி எண்ணையும் பெற்று கொண்டு, நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் வரவேண்டும். இது பற்றி போலிசாரிடமோ அல்லது யாரிடமோ புகார் செய்தால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவோம் என்று மிரட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து இருவரும் இது பற்றி யாரிடமும் புகார் செய்யாமல் இருந்தநிலையில், அந்த காமுகர்கள் மறுநாள் தொலைபேசியில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் நண்பர்கள் உதவியுடன், ஹயத் நகர் போலிசில் புகார் அளித்ததையடுத்து சீனிவாசரெட்டி, லிங்காரெட்டி ஆகிய 2 பேரை போலிசார் கைது செய்தனர். மேலும், இளம் பெண்ணை கற்பழித்ததை இருவரும் ஒப்புக் கொண்டதால் இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top