Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



அஜீத்தின் என்னை அறிந்தால் டீசரை பார்த்திட்டிங்களா.?

அஜீத்தின் என்னை அறிந்தால் டீசரை பார்த்திட்டிங்களா.?

அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இணையதளங்களில் இந்த டீசரை 12 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் பார்த்தனர். டீசரில் அஜீத் இரு கெட்டப்பில் தோன்றுகிறார். ஒரு கெட்டப்பில் வாட்ட சாட்டமான இளைஞனாக சிரித்த முகத்துடன் வருகிறார். இன்னொரு கெட்டப்பில் லேசான தாடி துப்பாக்கியுடன் ஆவேச முகம் காட்டுகிறார். துப்பாக்கியால் யாரையோ குறி வைக்கவும் செய்கிறார். கதையை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு டீசர் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். 

அஜீத் கெட்டப் பிரமாதமாக உள்ளது என்றும் கூறினர். அந்த டீசரில்... ஒரு மெல்லிசான கோடு... கோட்டுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன்.. அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன்... இந்த பக்கமா, அந்த பக்கமான்னு முடிவு பண்ண வேண்டிய நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒருநாள்... என்னை அறிந்தால்... என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top