Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு..(அரிய‌ தகவல்)

மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு..(அரிய‌ தகவல்)

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 

2.சுக்கைத் தூள் செய்து, எலுமிச் சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 

3.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலை யை மென்றுதின்றால், வாயுத் தொல் லை நீங்கும்.

5.சுக்கு, வேப்பம்பட்டைபோட்டு கஷா யம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலை வலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு( Pepper ) சேர்த்து, “சுக்குநீர்” காய் ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்ப டும்.

8.சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர்தெளித்து, மைய் யாக அரைத்துண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9.சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப்பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10.சுக்கு, மிளகு, சீரகம் (Cumin ), பூண்டு(Garlic)சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வர மாந்தம் குணமாகும்........!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top