Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



500 வருடம் முன்பு கூறப்பட்ட இந்தியாவின் எதிர்காலம்.?

இந்தியாவின் எதிர்காலம் பற்றி 500 ஆண்டுக்கு முன் கூறப்பட்ட ரகசியங்கள்!.

இந்த உலகில் ஏராளமான தீர்க்கதரிசிகள் உண்டு. ஆனால் இவர்களிலிருந்து நாஸ்டர்டாமஸ் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எழுதி வைத்த தீர்க்க தரிசனங்கள் அனைத்துமே தெளிவானவைகள். மிக துல்லியமான கணக்கின் விடைபோல தெரியகூடியவைகள். பிரான்சை சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் இன்னும் 3000 வருடங்கள் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர்.

சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. இந்நிலையில் நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி கூறியதில் நடந்தவைகளும் இனி நடக்க போவதும் பற்றி மேலும் காண்போம்....

இந்திராகாந்தி மரணத்தை சொன்னவர்;இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடத்தில் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்!"மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார்.

இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்" எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்!

மூன்றாம் உலக யுத்தம்; ஒரு உலக மகாயுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார். 2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 -ல் லிருந்து 2020 க்குள் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.

இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம் மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.

2026 -ல் உலகின் நம்பர் 1 நாடு இந்தியா; போருக்கு பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார் நாஸ்டர் டாமஸ். போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார். இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளைய தலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும். இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கிறார் நாஸ்டர்டாமஸ்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top