Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -ரஜினியை அரசியலில் ஈடுபட வைக்க Top வழிமுறை?..

ரஜினியை அரசியலில் ஈடுபட வைக்க Top  வழிமுறை?..

ரஜினியை எப்படியாவது வளைக்கணும்னு பி.ஜே.பி. கட்சிக்காரங்க என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாங்க. ஆனா ரஜினி அசைந்து கொடுப்பதாக இல்லை. அவங்க கஷ்டத்தை தீர்ப்பதற்காக நாமே கொஞ்சம் ஐடியா கொடுக்கலாமே.....

ரஜினி வழக்கமா இமயமலை போறப்போ பாபா குகைக்குள்ளதான் தியானம் பண்ணுவார். அடுத்து இமயமலை போற ப்ளான்லதான் இருக்கார். அவருக்கு முன்பே உங்க ஆட்களை அந்தக் குகைக்கு அனுப்பி, குகைக்குள்ள ஆடியோ சிஸ்டத்தை ரகசியமா ஃபிட் பண்ணுங்க. அதில், "அடுத்த தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு ஆதரவா களம் இறங்கணும்"னு ஆடியோவைப் பதிவு பண்ணுங்க, அவர் தியானத்தில் இருக்கிறப்போ அசரீரி மாதிரி அந்த ஆடியோ ஒலிக்கணும். அப்புறமென்ன, அவர் உங்க பக்கம்தான்!

ரஜினியோட 'லிங்கா' படத்தோட வெற்றியில்தான் இப்போதைக்கு ரஜினி கண்ணும் கருத்துமா இருக்கார். அதனால அது விஷயத்தில் பி.ஜே.பி கட்சிக்காரங்க அவருக்கு உதவியா இருக்கலாம். பி.ஜே.பி தொண்டர்களை 'லிங்கா' பட டிக்கெட்டை மொத்தமா வாங்கச் சொல்லி ரஜினியோட இதயத்தில் இடம்பிடிக்க முயற்சி பண்ணலாம்.

இதோட நின்னுடக் கூடாது. அப்படியே 'லிங்கா' படத்தோட டிக்கெட்டை மொத்தமா வாங்கி நீங்களே எல்லா தியேட்டரிலும் ப்ளாக்ல வித்துக் கொடுக்கணும். நமக்காக பய புள்ளைக எம்புட்டு கஷ்டப்படுதுங்கனு சூப்பர்ஸ்டாரோட கூலிங்கிளாஸையும் தாண்டி ஆனந்தத்துல கண்ணு வேர்க்கணும்.

அடுத்ததா, ரஜினியோட பன்ச் வசனங்களை பெருமைப்படுத்துற மாதிரி, திருக்குறள் மனப்பாட போட்டி ஸ்டைலில் பன்ச் வசனங்களை ஒப்பித்தல் போட்டி, ரஜினி படங்களிலிருந்து பொது அறிவு கேள்வி பதில் போட்டினு நடத்தி அதற்கான பரிசுகளை சூப்பர் ஸ்டார் கையாலே தரச் சொல்லலாம்.

ரஜினி ரசிகர்கள் தங்களோட பெயர்களை ரஜினிமுருகன், ரஜினிசேகர்னு வெச்சுப்பாங்க. அதே மாதிரி பி.ஜே.பி தலைவர்களும் ரஜினிராஜா, ரஜினிகணேசன்கற மாதிரி கெஜட்ல மாத்திடுங்க. மனுஷன் இதைக் கேள்விப்பட்டதும் உங்களோட வெறித்தனமான அன்பைப் பார்த்து கதறணும்.

ரஜினிக்கு இன்னும் தாதாசாகேப் பால்கே விருது கொடுக்கவேயில்லைனு யாராவது அந்த விருதை இவருக்கு தூக்கிக் கொடுங்க. அப்புறமா வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது, பாரதரத்னா விருதுனு அம்புட்டையும் மாசம் ஒரு விருதுனு கொடுங்க. மனுஷம் அப்படியே மெர்ஸலாகி பிரசாரத்துக்கு வந்திட மாட்டாரா என்ன?

ரஜினி பெயர்ல விருது கொடுக்கலாம். ரஜினி கண்டக்டரா இருந்து நடிகரானதைக் குறிக்கிற மாதிரி தமிழகத்தில் சிறந்த நடத்துனர்களை தேர்ந்தெடுத்து ரஜினி பெயரில் விருது கொடுங்க! இனி நீங்க விசிலடிச்சால் ரஜினியே ரை ரைட் சொல்வார்.

'பாட்ஷா' படத்துல நடிச்சதிலிருந்தே ஆட்டோ டிரைவர்கள் மேலயும் ரஜினிக்கு தனி பாசமாச்சே. அதனால இனி வருஷா வருஷம் ரஜினியோட பிறந்தநாளுக்கு ஆயிரம் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச ஆட்டோ வழங்கும் திட்டத்தை பி.ஜே.பி சார்பில் கொண்டு வாங்க. ஸ்டார்ட்டிங் டிரபிள் இருந்தாலும் கண்டிப்பா அவர் பிக்கப் ஆவார்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், அவருக்கு பாம்புன்னா பயம்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். பிரதமரை சந்திக்கக் கூப்பிடுறதா சொல்லி டெல்லிக்கு கூட்டிட்டுப் போய் அவரை தனியா கூட்டிட்டு போயி பாம்பை படமெடுக்க வெச்சு பயமுறுத்துங்க பாஸ். அந்த நேரம் பார்த்து பிரதமரை மகுடியோட என்ட்ரி கொடுக்க சொல்லுங்க. உயிரைக் காப்பாத்தின பிரதமருக்காக பிரசாரம் பண்ணாம விடுவாரா என்ன......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top