Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வியாழன் கிரகத்தின் மேல் ராட்சத கண்..(பரபரப்பு படம்)

வியாழன் கிரகத்தின் மேல் ராட்சத கண்..(பரபரப்பு படம்)

பெரிய கண்ணுடன் கூடிய வியாழன் கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கிப் படம் பிடித்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஜூபிடருக்கு மொத்தம் 67 நிலவுகள் உள்ளன. அதில் நான்கு நிலவுகள் மிகப் பெரியவை. அவற்றுக்கு கலிலியன் நிலவுகள் என்று பெயர். இந்த நான்கு நிலவுகளிலும் மிகப் பெரியதுதான் தற்போது கண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய கானிமேட் நிலவு என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாழன் கிரகத்தில் கண் போன்ற பரப்பளவில் புயல் ஏற்பட்டுள்ள பகுதியை, கானிமேட் நிலவு கடந்து சென்றபோது, பெரிய கண்ணில் கருவிழியாக அந்த நிலவு கருப்பாக தோன்றியது. இதைத்தான் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. பார்ப்பதற்கு பெரிய கண் போன்று இது காணப்படுகிறது. இது ஒரு அரிய காட்சியாகும். கிட்டத்தட்ட இந்த கண்ணின் விட்டமானது 10,000 மைல் ஆகும்......!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top