Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



பாஸ்ட்ஃபுட் கடைக்காரர் சொன்ன அதிர்ச்சி செய்தி!.

பாஸ்ட்ஃபுட் கடைக்காரர் சொன்ன அதிர்ச்சி செய்தி!.

*பாஸ்ட் ஃபுட் கடைக்காரர் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம்: அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகிக்கிறோம். அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும்போது அந்தக் கெட்டுப்போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை. 

*சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம். ஆனால், அது ஒரு தடை செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால்கூட அந்தச் சிவப்பு சாயம் உங்கள் கையில் இரண்டு நாள்களுக்கு இருக்கும். அது உங்கள் வயிற்றுக்குள் போனால்? 

*சோயா சாட்ஸ்: இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த எண்ணெயையோ கலந்து செய்கிறோம். 

*ரைஸ் கடாயில் உபயோகிக்கும்போது சோறு கடாயில் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம். 

*இன்னொன்று சொன்னா நம்ப மாட்டிங்க... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயியை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம். காரணம் அதில் உள்ள எண்ணெய்ப் பசை போகக் கூடாது என்பதற்காக. நாங்கள் கழுவி எண்ணெய்ப் பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும். 

*அஜினமோட்டோ: இதை அதிகமாக உபயோகிக்கிறோம். அது உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள். இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top