Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



விபசார தொழில் நடத்திய 17 வயது பள்ளி மாணவி!.

விபசார தொழில் நடத்திய 17 வயது பள்ளி மாணவி!.

அமெரிக்காவில் பள்ளிக்கூட மாணவி ஒருவர் பள்ளி மாணவர்களிடமும், இணையத்தளம் மூலமாகவும் விபச்சார தொழில் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஃப்ளோரிடா (Florida) நகரை சேர்ந்த அலெக்ஸா (Alexa) என்ற 17 வயது பள்ளிக்கூட மாணவி தனது சக மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இவர் இதற்காக 50 முதல் 100 டாலர்கள் வசூல் செய்துள்ளார்.

இதனையடுத்து தற்போது இவர் விபச்சாரம் நடத்தியதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜான் (John) என்ற 21 வயது இளைஞர் மது பாட்டல் ஒன்று கொடுத்தும், 40 டாலர்கள் கொடுத்தும் விருப்பமில்லாமல் இருந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் உடலுறவு வைத்து கொண்டதிற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 12 வயது சிறுமி ஒருவரிடமும் உடலுறவு வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலிசார் கூறுகையில், கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபட கூறுவதாக அலெக்சா மற்றும் அவரது கூட்டாளி மீது சக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top