Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மனிதரை விழுங்கும் அனகோண்டா..(பரபரப்பு செய்தி)

மனிதரை விழுங்கும் அனகோண்டா..(பரபரப்பு செய்தி)

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தான் அனகோண்டா பாம்பினால் விழுங்கபட போவதாக வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என அழைக்கப்படுபவர் பால் ரோசொலி இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

இவர் டுவிட்டரில் கூறியதாவது வரும் டிசம்பர் மாதம் டிஸ்கவரி TV-யில் ஒளிப்பரப்பாகவிருக்கும் "ஈட்டன் அலைவ்"  எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று நான் அனகோண்டாவுக்கு இரையாக போகிறேன். ஆனால் நான் எப்போதும் விலங்குகளை துன்புறுத்த மாட்டேன். மேலும் இது எப்படி சாத்தியம் என்பதை அறிய நீங்கள் "ஈட்டன் அலைவ்" நிகழ்ச்சியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்நிகழ்ச்சி பாம்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளதால், இதனை டிஸ்கவரி கைவிட வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உடை ஒன்றை பால் ரோசொலி அணிந்து, அனகோண்டாவால் உயிரோடு விழுங்கப்படுவாரென கூறப்படுகிறது.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top