Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


நண்பர்களே பஞ்சர் ஆகாத டயர் வந்துடிச்சி தெரியுமா.?

நண்பர்களே பஞ்சர் ஆகாத டயர் வந்துடிச்சி தெரியுமா.?

ஆட்டோமொபைல் துறையில் இப்போது புதிதாக ‘ஏர்-லெஸ் டயர்' அறிமுகம் ஆகியுள்ளது அதாங்க....காற்றில்லாத டயர்கள். மிகப் பிரபலமான டயர் கம்பெனியான ‘மிஷ்லின்’ நிறுவனம்தான், புதிதாக காற்றில்லாத டயர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மற்ற சாதாரண வீல்களில் உள்ள அலாய் மற்றும் ஸ்போக்ஸ் மெட்டீரியல்களைப்போல் இல்லாமல் இதில் ‘பாலியுரேத்தேன்’ எனும் மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

இது செம ஃப்ளெக்ஸிபிள் ஆகவும் பஞ்சர் போன்ற சேதாரங்கள் ஏற்படாத வண்ணமும் டயரைப் பாதுகாக்கிறது. டயரும் வீலும் தனித்தனியாக இல்லாமல் நடுவில் உள்ள ஒரு ‘ஹப்’ இதை இணைக்கிறது. இந்த ஏர்லெஸ் டயருக்கு ‘ட்வீல்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். (அதாவது, டயரின் முதல் எழுத்தான T'-யையும், வீலையும் சேர்த்தால் ட்வீல்!) 

சாதாரண வீல்களைப்போல் இல்லாமல் ‘ஆன்ட்டி ஸ்கிட்’ முறையில் (வழுக்கும் தன்மை இல்லாமல்) தயாரிக்கப்பட்டிருப்பது இதன் ஸ்பெஷல். இந்த ஏர்-லெஸ் ரேடியல் டயர்களில், ஒவ்வொரு பெட்ரோல் பங்க்காக அலைந்து காற்றடிக்க வேண்டியதில்லை; அதனால், வெயில் காலங்களில் காற்று இறங்கும் தொல்லை இல்லை; மேடு - பள்ளங்களில் பஞ்சராகி நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமை இனி இல்லை!’’ என்கிறது மிஷ்லின் நிறுவனம்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top