Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கத்தி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

கத்தி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

கத்தி படத்தின் முதல்நாள் வசூல் ரூ. 12.5 கோடியாம். விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளி அன்று ரிலீஸானது. படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்ததால் அதை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளால் படத்திற்கு இலவசமாக ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்தது. இதற்கிடையே பிரச்சனைகள் தீர உதவி செய்த மாண்புமிகு அம்மாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் படம் ரிலீஸானது. இந்நிலையில் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.அதேநேரம் இதுவரை வெளியான விஜய் படங்களில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக கத்தி இருக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் படம் வெளியானதே இதற்கு முக்கிய காரணம்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top