Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -பெங்களூர் மக்களுக்கு அதிர்ச்சியூட்டிய நிஜ பேய்கள்!.

பெங்களூர் மக்களுக்கு அதிர்ச்சியூட்டிய நிஜ பேய்கள்!.

நாம் குழந்தைகளாக இருக்கையில் பேய்கள் பற்றி நம் பெற்றோர்கள் பல கதைகளை கூறியிருப்பார்கள். இருப்பினும் பொய்யான கதைகள் எல்லாம் நிஜமான பேய் கதைகள் முன்பு நிற்க கூட முடியாது; குறிப்பாக சமீபத்தில் நகரத்தின் மத்தியில் காணப்பட்ட அவ்வகையான காட்சிகள். இந்தியாவிலுள்ள அழகிய நகரங்களில் ஒன்றான பெங்களூரில் இவ்வகையான அமானுஷ்ய விஷயங்கள் சிலவும் நடக்கத்தான் செய்கிறது.

பெங்களூர் மக்களால் சமீபத்தில் காணப்பட்ட சில பேய் நிகழ்வுகளை கேட்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு மூச்சே நின்று விடும். பெங்களூரில் வாழும் மக்களால் கடந்து வரப்பட்ட இந்த உண்மை கதைகள் கண்டிப்பாக அவர்களையும் உறைய வைத்திருக்கும். பெங்களூரில் காணப்பட்ட சில பேய்களுக்கு பெயர் இல்லாமல் இருக்கலாம், ஆனால் சிலரின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவ்வாறான காணப்பட்ட நிஜ சம்பவம் சில இதோ......

அழகிய பெண் பேய்;22 வயதான சங்கீதா நினைவு கூறுகையில்..."ஒரு நாள் மதிய வேளையில், கல்லூரி முடிந்தவுடன், கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு செல்ல தனியாக நடந்து வருகையில், என் மீது கனமான ஏதோ சுற்றிக்கொண்ட உணர்வை பெற்றேன். புது வகையாக இருந்த இந்த உணர்வு சரியானதாக தெரியவில்லை. எப்போதும் பின்னால் திரும்பி பார்க்க கூடாது என என் அம்மா கூறியிருந்த போதிலும், அதனை மீறி நான் திரும்பினேன். என்னால் பின்னாலோ அல்லது அருகிலோ யாரும் இல்லாதது எனக்கு பயத்தை அளித்தது.

ஆனால் யாரோ என்னுடன் இருந்த அந்த உணர்வு மட்டும் கண்டிப்பாக உண்மையே. நான் வேகமாக நடக்க ஆரம்பித்தவுடன் கொலுசு சத்தம் கேட்டது. நான் ஓட தொடங்கியதும் அந்த சத்தம் மிகவும் துல்லியமாக கேட்க தொடங்கியது. ரயில்வே ட்ராக் அருகில் இருக்கும் என் வீட்டிற்கு செல்லும் போது, வாசல் அருகில் என் அம்மா வரவேற்க நின்று கொண்டிருந்தார். அப்போது என் பின்னால் மிகவும் அழகிய, முக்காடு போர்த்திய ஒரு இள வயது உருவம் வந்துள்ளதை அவர் கண்டுள்ளார்."

கண்ணாடியில் பேய் உருவம் ; அபிலாஷ் நினைவு கூறுகையில்... "பார்டிக்கு ஒரு நாள் முன்பே என் வீட்டிற்கு என் அத்தை பெண் வந்திருந்தாள். பண்புள்ளவனான நான், அன்றிரவு அவள் தங்குவதற்கு என் அறையை அவளுக்கு அளித்தேன். அறைக்கு சென்ற ஐந்து நிமிடத்தில், பேயை கண்டதை போல் தலை தெறிக்க வெளியே ஓடி வந்தாள். என்னவென்று கேட்ட போது, கண்ணாடியை பார்த்து கூந்தலை சீவி கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டிலிருந்து ஒரு வயதான பெண்மணி அவள் முன் தோன்றி, சத்தம் போடாமல் ஓடி விட சொல்லி எச்சரித்ததாக அவள் கூறினாள்.

அந்த பெண்மணியின் தோற்றம் விகாரமாக இருந்தது எனவும் அவள் கூறினாள். இதில் என்ன கொடுமை என்றால் - என் அத்தை பெண் கூறிய அந்த வீடு 6 வருடமாக யாருமே இல்லாத வீடாகும். அந்த பெண்மணி இறந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது.

கன்னத்தை வருடிய பேய் ; பயந்து போன ஒரு 14 வயது சிறுமி கூறுகையில்... "எனக்கு பேய் மற்றும் தீய சக்திகள் என்றால் பயம் என்ற காரணத்தினால் என் அக்காவின் அருகில் தான் தூங்க பிடிக்கும். இருப்பினும் கடந்த இரவில் என் அக்காவிற்கு மட்டும் ஏதோ அலறல் சத்தம் கேட்டு, திடீரென விழித்திருக்கிறாள். அலறல் சத்தம் கேட்டு என் பெற்றோர்கள் ஏதோ பிரச்சனை என எண்ணி எங்களை காண, எங்கள் அறைக்கு வந்தார்கள்.

அப்போது பயந்து நடுங்கி கொண்டிருந்த என் அக்கா, தன் கையில் குளிர்ந்த ஸ்பரிசம் பட்டதாகவும், தன் கன்னத்தில் வாசனை மிக்க மல்லிகையால் வருடியதாகவும் கூறினாள். அவள் விளக்கத்தை கேட்டு நாங்கள் வியந்து கொண்டிருக்கும் போது, எங்கள் அறையில் அடர்த்தியான ஊதுபத்தி வாசனையை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். எந்த ஒரு பேயையும் நாங்கள் பார்க்கவில்லை என்றாலும் கூட, அழைக்கப்படாத ஒரு விருந்தாளியை நாங்கள் உணர்ந்தது மட்டும் உண்மையே.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top