Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உங்கள் ராசிக்கு எந்த உடற்பயிற்சி சிறந்தது தெரியுமா.?

உங்கள் ராசிக்கு எந்த உடற்பயிற்சி சிறந்தது தெரியுமா.?

நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு சிறந்த வழி உடற்பயிற்சி தான் என நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். ஒருவரின் உடல்வாகு படி தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றாலும் கூட, உங்கள் ராசிப்படி நீங்கள் உடற்பயிற்சிகளை செய்து வந்தால், நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு இதுவும் கூட சிறந்த வழியாகும். 

உங்கள் ராசி என்ன? உங்கள் உடலுக்கு எந்த உடற்பயிற்சி உகந்ததாக இருக்கும் என்பதைக் கண்டுபிடியுங்கள். தொடர்ந்து படித்து, எவ்வகை உடற்பயிற்சி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது சற்று காமெடியாக இருந்தாலும், முயற்சித்து தான் பாருங்களேன்... 

மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 20) இந்த ராசிக்காரர்களுக்கு உடற்பயிற்சி செய்தால் மனநிலை மேம்படும். அதனால் முக்கிய பகுதிகளில் (தசைகளை மேம்படுத்தி, வலுவை அதிகரிப்பது) கவனம் செலுத்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். சீராக செய்யப்படும் இதயக்குழலிய உடற்பயிற்சிகள் தவிர, சைக்கிளிங் மற்றும் பளு தூக்கல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவதும் உங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 

ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21) ரிஷப ராசிக்காரர்களுக்கு உணவின் மீது அலாதி பிரியம் என கூறப்படுகிறது. அதனால் உங்கள் உடலுக்கு எவ்வளவு தேவையோ அதையும் மீறி உட்கொள்ளும் போது, உங்கள் உடல் எடை அதிகரிக்கக்கூடும். எளிய உடற்பயிற்சிகளான நீட்சி மற்றும் திடப்படுத்தும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு பயனை அளிக்கும். க்ராஸ் ட்ரைனிங் மற்றும் நடனம் போன்ற சக்தி மிக்க உடற்பயிற்சிகளை, உங்கள் தினசரி உடற்பயிற்சிகளோடு சேர்த்துக் கொள்ளுங்கள். 

மிதுனம் (மே 22 - ஜூன் 21) மிதுன ராசிக்காரர்கள் மனம் போன போக்கில் இருப்பவர்கள். ஆனால் உங்கள் உடல் அமைப்பு சீராக செயல்பட சரியான உடற்பயிற்சியில் நீங்கள் ஈடுபடுவது அவசியமாகும். குழுவுடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லதாகும். அதனால் ஏரோபிக்ஸ் அல்லது ஜூம்பா உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 

கடகம் (ஜூன் 22 - ஜூலை 22) தண்ணீர் விளையாட்டுக்கள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். அதனால் நீச்சல் மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட இதர உடற்பயிற்சிகளான தண்ணீர் ஏரோபிக்ஸ் போன்றவைகளில் ஈடுபட்டால், உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து, உடல் எடையை குறைக்கவும் உதவும். சைட் லிஃப்ட்ஸ் மற்றும் தசையை திடப்படுத்தும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும். 

சிம்மம் (ஜூலை 23 - ஆகஸ்ட் 22) சீரான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்திற்கு மிகவும் நல்லதாகும். அதனால் தான் நீங்கள் தினசரி அடிப்படையில் உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும். மேல் முதுகு தான் முக்கிய பிரச்சனை ஏற்படும் பகுதி என்பதால், முதுகு பக்கம் உள்ள தசைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜோடி நடனம் மற்றும் பில்லேட்ஸ் போன்ற நடவடிக்கைகள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். 

கன்னி(ஆகஸ்ட்23-செப்டம்பர்20) கன்னி ராசிக்காரர்கள் உடலை கட்டுக் கோப்புடன் வைத்திருக்க விரும்பினாலும் கூட, உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வந்துவிட்டால், பல நேரங்களில் அவர்கள் சோம்பேறியாகி விடுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு முழு உடல் உடற்பயிற்சிகள் தான் உகந்ததாக இருக்கும். அதனால் கால் பந்து விளையாடுதல், நடனம் ஆடுதல் மற்றும் ஓடுதல் போன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு பலனை அளிக்கும். 

துலாம் (செப்டம்பர்21-அக்டோபர்22) குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகள் தான் உங்களுக்கு உகந்ததாகும். அதனால் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிற உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். கோல்ஃப் அல்லது டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இருப்பினும் ட்ரெட்மில் மீது நடை கொடுப்பது அல்லது ஜாக்கிங் செல்வது போன்ற உயரிய சக்தி கொண்ட பயிற்சிகளும் கூட உதவிடும். 

விருச்சிகம் (அக்டோபர்23 -நவம்பர் 21) நீங்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என உங்கள் ராசி கூறுவதால், விடாமுயற்சியுள்ள உடற்பயிற்சிகளை செய்யுங்கள். தற்காப்பு கலை பயிற்சி மற்றும் மாரத்தான் ஓட்டம் போன்றவைகள் உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்திட விருப்பப்பட்டால், க்ராஸ் ட்ரைனிங் மற்றும் இதர உடற்பயிற்சிகள் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். 

தனுசு (நவம்பர்22 -டிசம்பர்21) மற்ற அணைத்து ராசிக்காரர்களை விட நீங்களே ஆரோக்கியமானவர்களாக கருதப்பட்டாலும் கூட நெகிழ்வை உண்டாக்கும் நீட்சியின் மீது கவனத்தை செலுத்துங்கள். மலையேறுதல் மற்றும் ஓடுதல் போன்ற தீவிரமான விளையாட்டுக்கள் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் இவ்வகையான உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பவில்லை என்றால், ஜிம் சென்று, ட்ரெட்மில் அல்லது க்ராஸ் ட்ரைனிங் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம். 

மகரம் (டிசம்பர் 22 - ஜனவரி 19) எலும்புகள் மற்றும் மூட்டுக்களே உங்களுக்கு அதிகமாக பிரச்சனை ஏற்படுகிற பகுதிகள் என்பதால், இவைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். சுறுசுறுப்பாக நடை கொடுத்தல் மற்றும் ஜாக்கிங் போன்றவைகள் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் சைக்கிளிங் மற்றும் நின்ற இடத்தில் செய்யப்படும் ஜாக்கிங் போன்றவைகளும் உங்களுக்கு உடலுக்கு நல்லதாகும். 

கும்பம் (ஜனவரி20-பிப்ரவரி18) தீவிரமான உடற்பயிற்சிகள் உங்களுக்கு நல்லது என்றாலும் நடனம் மற்றும் நடனம் சம்பந்தப்பட்ட இதர பயிற்சிகளில் நீங்கள் ஈடுபட்டால் உடல் எடையை குறைக்கலாம். இருப்பினும் நீண்ட தூரத்திற்கு ஓடுதல் மற்றும் பளுத்தூக்கல் போன்றவைகளிலும் ஈடுபடலாம். 

மீனம் (பிப்ரவரி 19 - மார்ச் 20) யோகா மற்றும் சமநிலை சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகள் தான் உங்களுக்கு உகந்ததாகும். உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நீச்சல் போன்ற தண்ணீர் விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம். தியானமும் பிலேட்சும் கூட உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top